முதலிரவில் ஷர்மிகா தூங்கிடுச்சி.. ஆதாரத்திற்கு மாப்பிள்ளையே போட்டோ காட்டினாரு.. டெய்சி கலகல பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவரான டெய்சி, தனது மகளும் சித்த மருத்துவவருமான ஷர்மிகாவுடன் கூட்டாக நேர்காணலில் கலந்துகொண்டபோது மகளின் முதலிரவு ரகசியங்களை வெளிப்படையாக தெரிவித்தது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. யூடியூப் சேனலில் வெளியான அந்த நேர்காணலை பகிர்ந்து பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவராக இருந்து வருபவர் டெய்சி. தொலைகாட்சிகளில் மருத்துவ குறிப்புகளை வழங்கி வந்ததன் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான இவர் பாஜகவில் இணைந்து மாநில சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்து வருகிறார்.

டெய்சியின் மகளான ஷர்மிகாவும் யூடியூபில் பிரபலமான முகமாக அறியப்பட்டு வருகிறார். சித்த மருத்துவரான இவர், யூடியூப் சேனல்களில் சித்த மருத்துவம் சார்ந்த ஆலோசனை வழங்கி வருகிறார். இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு டெய்சியும் ஷர்மிகாவும் ஒன்றாக பேட்டியளித்தனர்.

முதலிரவில் தூங்கிய ஷர்மிகா

முதலிரவில் தூங்கிய ஷர்மிகா

அப்போது பேசிய டெய்சி, "எனது மகளோட நேர கட்டுப்பாடு ஒழுக்கத்திற்கு ஒரு உதாரணமாக இதை சொல்லித்தான் ஆக வேண்டும். திருமணமாகி முதலிரவுக்கு சென்றார். அடுத்த நாள் காலை, என்ன ஏதாவது நடந்ததா என்று கேட்டேன். அப்போது அத்தை, '10:30 மணிக்கு அப்படியே தூங்கிவிட்டார். போட்டோவை எடுத்து வைத்துள்ளேன்.' என்று மருமகன் தருண் என்னிடம் காட்டினார்.

ஷர்மிகா விளக்கம்

ஷர்மிகா விளக்கம்

திருமண இரவில் சீக்கிரமே தூங்கிவிட்டு மறுநாள் காலை 5 மணிக்கு எழுந்து நடைபயிற்சிக்கு சென்றுவிட்டார். இப்படி ஒரு கொடுமை நடந்தது." என்றார் டெய்சி. இதனை கேட்ட ஷர்மிகா, "விருந்தினர் வருவதாக தெரிவித்து இருந்தார்கள். அதனால் நான் சீக்கிரமாக எழுந்துவிட்டேன்." என்று விளக்கமளித்தார். அப்போது டெய்சி குறுக்கிட்டு "ஒன்னுமே நடக்கல என்று அவர் சொன்னார் என்றார்.

ஒரு மாதமாக இதே நிலை

ஒரு மாதமாக இதே நிலை

அதாவது ஷர்மிகா தூக்கம் வருகிறது என்பாராம், அவர் கணவரும், சரி தூங்குங்க என்று சொல்லிவிடுவாராம். இருவரும் தூங்கி எழுந்துவிட்டு வந்தார்களாம். இப்படி ஒரு மாதம் சென்றதாம். இத்தோடு விடவில்லை டெய்சி. பேட்டியில் மேலும் கூறுகையில், "நடப்பதெல்லாம் அந்தந்த நேரத்தில் நடக்க வேண்டும்.. என்று நான் சொன்னேன். அதற்கு 'சும்மா நீங்க அந்த காலத்தை போல் அன்றைக்கே சேர வேண்டும் என்று சொல்லாதீங்க. எங்களுக்கா அப்படி தோன்ற வேண்டும்.' என்று என்கிட்ட ஷர்மிகா சொல்லிட்டார்" என்று சிரித்தபடியே டெய்சி தனது பேட்டியில் தெரிவித்தார். தாய் இப்படி சொன்னதை கேட்ட ஷர்மிகா, "அப்படியே ஒரு வருடம் ஓடிவிட்டது.." எனக்கூறி நமட்டு சிரிப்பு சிரிக்க.. அருகில் இருந்த டெய்சியோ, "ஏய்.." என்று தட்ட.. ஷர்மிகா, "சும்மா விளையாட்டுக்கு.." என்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

சூர்யா சிவாவுடனான உரையாடல்

சூர்யா சிவாவுடனான உரையாடல்

பாஜக ஓபிசி பிரிவில் மாநில பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த சூர்யா சிவா உடனான ஆபாச தொலைபேசி உரையாடலால் மீண்டும் மக்கள் மத்தியில் டெய்சி பிரபலமானவர். அந்த ஆடியோவில் சூர்யா சிவா, டெய்சியை கடுமையான ஆபாச வார்த்தைகளை கொண்டு திட்டி, கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ கடந்த நவம்பர் மாதம் வெளியானது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த உரையாடலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்ச்சர் அமித்ஷா, ஜேபி நட்டா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோரின் பெயர்களையும் சுட்டிக்காட்டி இருந்தார் சூர்யா சிவா. இதனை தொடர்ந்து சூர்யா சிவாவை அண்ணாமலை 6 மாதகாலம் கட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டாம் என உத்தரவிட்டார்.

அக்கா - தம்பி உறவு

அக்கா - தம்பி உறவு

இதனை அடுத்து பாஜக தலைமை இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பின்னர் திருச்சி சூர்யாவும் டெய்சியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய டெய்சி "திருச்சி சூர்யா எனக்கு தம்பி மாதிரி. எங்களுக்கு இடையே அக்கா - தங்கை போன்ற உறவு உள்ளது." என்றதும் விமர்சனத்துக்கு உள்ளானது. மற்றொரு நேர்காணலில் பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் முன், ஒரு பெண் அவுத்து போட்டு நின்னா கூட திரும்பி பார்க்க மாட்டார் என்று டெய்சி கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த சூர்யா சிவா, தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர்கள், டெய்சி ஆகியோரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

சர்ச்சையில் சிக்கும் ஷர்மிகா

சர்ச்சையில் சிக்கும் ஷர்மிகா

சமீப காலமாக டெய்சியின் மகள் ஷர்மிகாவும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். யூடியூப் சேனல்களில் சித்த மருத்துவம் என்ற பெயரில் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை தெரிவிப்பதாகவும், மாட்டுக்கறி தொடர்பான கேள்வியில் அறிவியலை ஓரம் வைத்துவிட்டு மனிதனை விட பெரிய விலங்கை சாப்பிடக்கூடாது என்று கூறியதும் சர்ச்சைக்கு உள்ளானது. பலரும் ஷர்மிகாவின் முந்தைய பேட்டிகளை எடுத்து விமர்சித்து வரும் நிலையில், இந்த முதலிரவு தொடர்பான பேச்சு வீடியோ டிரெண்டாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+