தமிழக மீனவர்கள் மட்டுமல்ல..இந்திய மீனவர்கள்! ஸ்டாலின் போட்ட ட்வீட்! பஞ்சாயத்துக்கு வந்த அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் மீனவ பிரதிநிதிகளை சந்தித்த செய்தியை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின்,”இவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டுமல்ல; இந்திய மீனவர்கள்!” என கூறியிருந்தார். இந்நிலையில் முதல்வரின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வங்கு கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையாகி வருகிறது.

Annamalai Mk Stalin fishermen


இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும் எனவும், அவர்களது மீன்பிடி படகுகளை ஒப்படைக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி இருந்தார. அதில் தற்போது வரை 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவர்களை விடுவிக்க மத்திய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மீனவப் பிரதிநிதிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அவர்களிடம் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்தார். தொடர்ந்து இந்த செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில்,””இவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டுமல்ல; இந்திய மீனவர்கள்!” என கூறியிருந்தார்.

இதற்கிடையே முதலமைச்சரின் அந்த பதிவை விமர்சித்து பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. அந்த பதிவில்,”தமிழகத்தைச் சேர்ந்த மீனவ சமுதாய மக்கள், இலங்கை கடற்படையால் பாதிப்புக்குள்ளாவதற்கு முழுமுதற் காரணமே, திமுக காங்கிரஸ் கட்சிகள், கச்சத்தீவைத் தாரை வார்த்ததுதான். அப்போது தெரியவில்லையா அவர்கள் இந்திய மீனவர்கள் என்று?


திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது, 80க்கும் மேற்பட்ட மீனவ சகோதரர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அவர்கள் இந்திய மீனவர்கள் என்பது நினைவுக்கு வரவில்லையா? மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, தங்கள் குடும்பம் சம்பாதித்தால் மட்டும் போதும் என்று, மீனவர்களை வஞ்சித்த திமுக, தற்போது மீனவர் நலன் என்று நாடகமாடுகிறது என்பது மீனவ சமுதாய மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

மீனவர்கள் நலன் காக்க உருவாக்கப்பட்ட, 'தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கம்’ முதலமைச்சர் ஸ்டாலின் அரசால் கலைக்கப்பட்டது. 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் உள்ளிட்ட மீனவ சமுதாய மக்களுக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளைக் கடந்தும் நிறைவேற்றவில்லை. இப்படி, மீனவர்களுக்குத் தொடர்ந்து துரோகம் மட்டுமே செய்து கொண்டிருக்கும் திமுக, மீனவர் நலன் குறித்துப் பேசுவது விளம்பர நாடகமே அன்றி வேறென்ன?

இந்தியக் குடிமக்கள் எங்குப் பாதிப்புக்குள்ளானாலும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி
அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, உடனடியாகச் செயல்பட்டு அவர்களை மீட்டுக் கொண்டு வரும் பணியைத் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. உலகின் பல நாடுகளிலிருந்து நமது நாட்டு மக்கள் எந்தப் பாதிப்புமில்லாமல் மீட்கப்பட்டுள்ளனர். எனவே, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தமிழன், இந்தியன் என்று திமுகவின் மேடைப் பேச்சாளர்கள் போல, பிரிவினை நாடகத்தை அரங்கேற்ற முயற்சிக்க வேண்டாம். அவர் வகிக்கும் மாநில முதலமைச்சர் பதவிக்கு அது அழகும் அல்ல.” என விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+