என் சாதி பொண்ணு ஓடி போய்ட்டா! முதல்வர் குறித்து அவதூறு! வீடியோ வீரம் காட்டிய பாஜக புள்ளி! ஆனா இப்போ!
சென்னை : சமூக வலைத்தளங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பட்டியலினத்தவர் குறித்து ஆபாசமாக பேசிய பாஜக பிரமுகர் குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், போலீசார் அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை அருகே திருநின்றவூர் அடுத்த கொசவம்பாளையம், கொட்டம்மேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி . தொழில் நிறுவனங்களுக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பற்றி சமூக வலைத்தளத்தில் அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டிருந்தார்.

சர்ச்சை வீடியோ
மேலும் தனது சமூகத்தை சேர்ந்த உறவினர் பெண் பட்டியலினதவருடன் காதல் திருமணம் செய்து கொண்டார் என கூறி பட்டியலினதவர்களை கொச்சையாக பேசி அதனை சில தினங்களுக்கு முன்னர் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்துள்ளார். இந்த காட்சிகள் வேகமாக பரவியது தொடர்ந்து பலரும் இணையத்தில் தமிழக காவல்துறை டேக் செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோரி இருந்தனர்.

பாஜக பிரமுகர்
இந்தநிலையில் இந்த வீடியோ பதிவு பற்றி திருவள்ளூர் மத்திய மாவட்ட கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த் என்பவர் முதல்வர் குறித்து அவதூறு பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்,IT ACT உள்ளிட்ட சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.

அதிரடி கைது
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பூபதி வெங்கடேசனை திருநின்றவூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான காவலர்கள் ஆவடி அருகே கைது செய்தனர். இது குறித்து தகவலறிந்து திமுகவினர் காவல்நிலையம் வந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என்பதால் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

பரபரப்பு
கைது செய்யப்பட்ட பூபதி ஏற்கனவே திமுகவில் உறுப்பினராக இருந்ததும் அதிலிருந்து விலகி தற்போது பாஜகவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. முதல்வர் குறித்தும் பட்டியலினத்தவர்கள் குறித்தும் கொச்சையாக பேசி வீடியோ பதிவிட்ட முன்னாள் திமுக இந்நாள் பாஜக கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications