சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலினை பாராட்டிய வானதி.. ஆனாலும் போற போக்கில் திமுகவுக்கு ஒரு இடி.. வைத்த முக்கிய கோரிக்கை..!

திமுக அரசை விமர்சித்து வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை:அலங்கார ஊர்தி நிராகரிப்பு விவகாரத்தில் திமுக அரசு அரசியல் ஆதாயம் தேடுவதாக கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.. அத்துடன் முக்கிய கோரிக்கை ஒன்றையும் முதல்வரிடம் வானதி முன்வைத்துள்ளார்.

டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது..

மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களான கப்பலோட்டிய தமிழர் வஉசி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. இவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என்று கூறி மத்திய அரசு நிராகரித்துள்ளது..

 தமிழ்நாடு லாக்டவுன்.. அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகள் நிறுத்த வாய்ப்பு?.. விரைவில் அறிவிப்பு? தமிழ்நாடு லாக்டவுன்.. அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகள் நிறுத்த வாய்ப்பு?.. விரைவில் அறிவிப்பு?

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இதையடுத்து தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன், அலங்கார ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கப்பதற்கு நிராகரிப்பட்டது ஏமாற்றமளிப்பதாகவும், எனவே பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதியிருந்தார்.

 வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

எனினும், தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.. இந்நிலையில், திமுகவை விமர்சித்துள்ளார் வானதி சீனிவாசன்.. இது தொடர்பாக தமிழக பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் உள்ளதாவது:

 கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா கட்டுப்பாடுகள்

டெல்லியில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறாதது குறித்து திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றன.கொரோனா கட்டுப்பாடுகள், பாதுகாப்பு காரணம், பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகளை முடிப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் இந்த ஆண்டு அலங்கார ஊர்திகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

 அமைச்சகங்கள்

அமைச்சகங்கள்

குறிப்பாக பாஜக ஆளும் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் அலங்கார ஊர்திக்கு விண்ணப்பித்து இருந்தாலும் 12 ஊர்திகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதனையும் மத்திய அரசு தேர்வு செய்யவில்லை. அதற்கென அமைக்கப்பட்ட நிபுணர் குழுவே தேர்வு செய்துள்ளது.

 அலங்கார ஊர்திகள்

அலங்கார ஊர்திகள்

இந்த உண்மைகளை மறைத்து, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியின் ஒரு பகுதியாக திமுக அரசின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. இருந்தாலும், சுதந்திரப் போராட்ட வீரர்களை மக்களிடம் கொண்டுச் சேர்க்கும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் மனதார வரவேற்கிறோம். இந்த அலங்கார ஊர்தியை குக்கிராமங்கள் வரை கொண்டுச் செல்ல வேண்டும்.

பாராட்டுகிறோம்

பாராட்டுகிறோம்

வ.உ. சிதம்பரனார், வேலுநாச்சியார் போன்ற விடுதலைப் போராட்ட தலைவர்களின் வீர வரலாற்றையும், அவர்களின் தேசியம், தெய்வீகம் தாங்கிய கருத்துக்களையும் மக்களிடம் கொண்டுச் சேர்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள முயற்சிகளை வரவேற்கிறோம். பாராட்டுகிறோம். தமிழகத்திலிருந்து இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களை நினைவு கூரும் வகையில் மாவட்டத்திற்கு ஒரு அலங்கார ஊர்தியை, தமிழக அரசு ஏற்பாடு செய்து, மாநிலம் முழுவதும் வலம் வரச் செய்ய வேண்டும் என்றும் இந்த நேரத்தில் வேண்டுகோள் விடுக்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
BJP MLA Vanathi Srinivasan says the DMK should get rid of the culture of politics in everything
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X