"நோட் பண்ணுங்க"..ப்பா.. விபி துரைசாமி பேசிய பேச்சு.. கடுப்பான திமுக.. ஜெர்க் ஆன அதிமுக!
சென்னை: அன்று விபி துரைசாமி பற்ற வைத்த தீ, இன்று குபுகுபுவென எரிந்து கொண்டிருக்கிறது.. "நான் அன்னைக்கு சொன்னேன் இல்லையா, பாஜகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என்று, அதேதான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது" என்று சொல்லி மீண்டும் ஒருமுறை திமுகவுக்கு ஷாக் தந்துள்ளார், அத்துடன் அதிமுகவுக்கும் ஒரு ஜெர்க் தந்துள்ளார் பாஜகவின் துணை தலைவர் விபி துரைசாமி.
கலைஞர் இருந்தபோதே, திமுகவின் டாப் 4 பதவிகளில் ஒன்றை கைவசம் வைத்திருந்தவர் விபி துரைசாமி.. மிக மூத்த, முக்கியமான பிரமுகர்.. இவர் திமுகவுக்கு எதிராக, அதுவும் வெளிப்படையாக போர்க்கொடி தூக்கியபோது திமுக மட்டுமில்லை.. ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ந்துபோனது.
பரிதி இளம்வழுதிக்கு பிறகு, துணை பொதுச்செயலாளர் பதவியில் நீண்ட காலம் இருந்தவர் விபி துரைசாமி.. கொங்கு மண்டலத்தில் எந்த அளவுக்கு கவுண்டர் சமூகம் உள்ளதோ, அதுபோலவே, அருந்ததியர் சமூகமும் உள்ளது.. அப்படிப்பட்ட மக்களிடம் தனித்துவத்துடன் இவர் விளங்கினார்.
"ஹீரோ".. திமுகவா இப்படி.. நம்பவே முடியலையே.. ஆனா "அந்த" ஒரு விஷயம்தான்.. வியந்து பார்க்கும் தமிழகம்

முதல் பேட்டி
ஆனால், பாஜகவுடன் இணைந்தபோது, இவரது முதல் பேட்டியே பெரும் அதிர்ச்சியாக பார்க்கப்பட்டது.. "தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும்... பாஜவை எந்த கட்சி அனுசரித்து போகிறதோ அந்த கட்சியுடனே கூட்டணி அமைக்கப்படும்.. தமிழகத்தில் திமுக vs அதிமுக என இருந்த நிலை திமுக vs பாஜக என மாறி உள்ளது" என்று சவால் விட்டு பேசினார்.

திராவிட பிம்பம்
திராவிட பிம்பம் ஒன்று, பாஜகவின் நிழலாக முழுசா உருமாறி நின்றதை தமிழக மக்கள் வியப்புடன் பார்த்தனர்.. இப்போதும் அதே பேச்சில்தான் உறுதியாக இருக்கிறார் துரைசாமி.. இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, "உங்கள் அறிக்கை எங்கள் விருப்பம்" என்ற திட்டத்தின் மூலம் மக்களிடம் நேரடியாகச் சென்று அவர்களின் கோரிக்கைகளை பெற்று அதனைத் பாஜக தேர்தல் அறிக்கையில் வெளியிட உள்ளோம்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன் ஜோசியத்தில் ரொம்ப நம்பிக்கை உடையவர். அதனால்தான் அவர் நேற்றே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார்.. இதை பற்றி மாநில தலைவர் முருகனிடம் நேற்றே சொல்லிவிட்டார்.. அதுவும் இல்லாமல் ஓரளவிற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இருப்பதால் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

திமுக
2 மாசத்துக்கு முன்னாடி, தமிழகத்தில் பாஜகவிற்கும் திமுகவிற்கும் தான் நேரடி போட்டி என்று உங்கள் முன்னாடிதான், நான்தான் சொன்னேன்.. அதுதான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.. பாஜக Vs திமுகதான் போட்டி.. இது ஆரோக்கியமான போட்டியா இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

சமாதானம்
திமுகவை மீண்டும் சீண்டி துரைசாமி பேசியுள்ளது பரபரப்பை கிளப்பி வருகிறது.. இப்போதுவரை விபி துரைசாமியை கட்சியில் இருந்து நீக்காமல் சமாதானம் செய்திருக்க வேண்டும் என்று ஒரு தரப்பு சொல்கிறது.. அதேசமயம், எத்தனை முறை பதவி தந்தாலும் நன்றி மறந்துவிட்டு பேசினால் என்ன செய்வது? என்று திமுகவின் இன்னொரு தரப்பும் கருத்து சொல்கிறது.. அதுமட்டுமல்லாமல் அழகிரியுடன் சேர்நது ஏதாவது திமுகவுக்கு எதிரான காய்களை துரைசாமி நகர்த்தக்கூடுமோ என்ற கலக்கமும் திமுகவில் ஒரு சாராரிடம் உள்ளது.

அதிமுக
இது ஒரு பக்கம் இருந்தாலும், பாஜகவுக்கும், திமுகவுக்கும்தான் போட்டி என்றால், அதிமுக என்ற ஒரு கட்சியையே விபி துரைசாமி கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.. வழக்கமாக தமிழகத்தில் திமுக - அதிமுகதான் போட்டி 50 வருஷமாக இருக்கிறது.. இந்த நிலையை தற்போது பாஜக உடைத்து கொண்டு வருவதை அதிமுகவும் நோட் செய்து கொண்டுதான் இருக்கும் போல..!