நேரடியாக இறங்கிய பாஜக தேசிய தலைமை.. “விஜய் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு”- வீடியோவுடன் அட்டாக்
சென்னை: தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக அகில இந்திய பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டு விஜய் அரசை விமர்சித்துள்ளது பாஜக.
இதுதொடர்பாக பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "காங்கிரஸ் - தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பல குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இதற்காகவா தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்தார்கள்?" என கேள்வி எழுப்பி உள்ளது. விஜய் அரசை விமர்சித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் நடித்த 'கத்தி' படத்தில் சிறைக் கைதிகள் தப்பியபோது, அதனை கண்டறிய சிறையின் ப்ளூ பிரிண்டை விஜய் பார்வையிடும் காட்சியை குறிப்பிட்டு தொடங்கும் அந்த வீடியோவில், "23 ஆம் தேதி இரண்டு சிறைவாசிகள் சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து தப்பித்தனர். இந்த சிறையை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஆய்வு செய்திருந்தார். ஆனால், அது வெறும் தொடக்கம்தான். 26 ஆம் தேதி தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் சிறை காவலர்களை தாக்கிவிட்டு, தப்பித்துள்ளனர்.
தவெக அமைச்சர்களும், கூட்டணி கட்சியினரும் பிரபலத்திற்காக ரீல்ஸ் வெளியிட்டுக்கொண்டிருக்க, தவெக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. முதலமைச்சர் விஜய், தனது பிரச்சாரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தனது ஆட்சியில் சிறப்பாக இருக்கும் என பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், தற்போது அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
𝐀𝐛𝐬𝐨𝐥𝐮𝐭𝐞 𝐟𝐚𝐢𝐥𝐮𝐫𝐞 𝐨𝐟 𝐥𝐚𝐰 𝐚𝐧𝐝 𝐨𝐫𝐝𝐞𝐫 𝐢𝐧 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐭𝐡𝐞 𝐂𝐨𝐧𝐠𝐫𝐞𝐬𝐬-𝐓𝐕𝐊 𝐫𝐞𝐠𝐢𝐦𝐞!17 prisoners escaped from Theni jail, and several children have gone missing across Tamil Nadu. Is this the kind of governance the people of Tamil Nadu voted for?
— BJP (@BJP4India) October 28, 2026
காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய், குற்றங்கள் மீதான நடவடிக்கை முற்றிலும் காணாமல் போயுள்ளது. இதைத்தான் தமிழ்நாடு மக்கள் எதிர்பார்த்தார்களா..? இதற்காகவா அவர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள்? இந்த அரசாங்கத்தின் வெட்கக்கேடு இது" என்று பாஜக விமர்சனம் செய்துள்ளது. இதுவரை அகில இந்திய பாஜக சார்பில் தவெக அரசை நேரடியாக விமர்சனம் செய்யாத நிலையில், தற்போது இந்த விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
