Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிக்கும் ‘தலை’க்கு நெருக்கமான ‘டாப்’ புள்ளி.. “வசூல் வேட்டை”? அதிரடி காட்டிய மேலிடம்! பாஜகவில் பரபர!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு நெருக்கமாக இருக்கும் ஒரு முக்கிய நிர்வாகி மீது மோசடி, மிரட்டல், பண வேட்டை புகார்கள் வரிசைகட்டி வருகின்றனவாம். இதையடுத்து, மேலிடம் அவரிடம் விசாரணையை தொடங்கியிருப்பதாக பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது. பாஜகவில் ஆடியோ, வீடியோ, வாட்ச் சர்ச்சை என அடுத்தடுத்து சர்ச்சைகள் சூழ்ந்து வரும் நிலையில், முக்கிய நிர்வாகி பல லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டிருப்பது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமான புள்ளி அவர். அண்ணாமலையின் லெஃப்ட் ஹேண்ட் ஆக செயல்படுபவர் என பாஜகவுக்குள்ளேயே பேச்சுகள் உண்டு. அவர் மீது வரிசையாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறதாம்.

முதலில் கட்சி நிர்வாகிகள் சிலர் அரசல் புரசலாகப் பேசி வந்த நிலையில், சில தொழிலதிபர்களும், அவருக்கு எதிராக புகார்களை அடுக்கியுள்ளனராம். இதனால், அலெர்ட் ஆன மேலிடம், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளதாம். இதுதான், தமிழக பாஜக வட்டாரத்தில் தற்போது 'ஹாட்' டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

முக்கிய புள்ளி

முக்கிய புள்ளி

தமிழக பாஜக மாநில தலைவராக அண்னாமலை பொறுப்பேற்ற பிறகு, கட்சியில் பல்வேறு புதிய பிரிவுகள் உருவாக்கப்பட்டன. அந்தவகையில், கடந்த 2021 செப்டம்பரில் ஒரு புதிய பிரிவை உருவாக்கி அந்த அணிக்குத் தலைவராக ஒரு இளைஞரை நியமித்தார் அண்ணாமலை. டெல்லியில் பாஜக தலைவர்களுக்கு நெருக்கமான அவர், அண்ணாமலைக்கும் மிகவும் நெருங்கியவர் என்றும் அறியப்பட்டதால், மிக விரைவிலேயே பரவலாக கவனம் பெற்றார். தமிழக பாஜகவிலும் அவரது செல்வாக்கு வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியது.

அண்ணாமலைக்கு நெருக்கம்

அண்ணாமலைக்கு நெருக்கம்

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே அந்த முக்கிய நிர்வாகி மீது கட்சிக்குள்ளேயே பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவரது அணியில் இருந்த மாநில நிர்வாகி ஒருவரே, இவரது நடவடிக்கைகள் சரி இல்லை, முறைகேடுகளில் ஈடுபடுகிறார் என்று கூறி, தனது பொறுப்பில் இருந்து விலகினார். இதுதொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலையிடமும் புகார் தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால், புகாருக்கு உள்ளான அந்த லெஃப்ட் ஹேண்ட் மீது அண்ணாமலை எந்த ஆக்‌ஷனும் எடுக்கவில்லை.

மோசடி பேர்வழிகளுக்கு அடைக்கலம்

மோசடி பேர்வழிகளுக்கு அடைக்கலம்

பிரதமர் பெயரில் நடத்தப்படும் ஒரு நிகழ்வுக்காக, தொழிலதிபர்கள், கட்சியினர் என பலரிடம் போலியாக பில் தயார் செய்து வசூல் வேட்டை நடத்துவதாக சமீபத்தில் இன்னொரு பாஜக நிர்வாகியும் புகார் தெரிவித்திருந்தார். மேலும், குற்ற வழக்குகள், பண மோசடிகளில் தொடர்புடையவர்களுக்கு கட்சியில் அடைக்கலம் கொடுப்பதாகவும் அவர் மீது வரிசையாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பணம் கொடுத்தால் பதவி

பணம் கொடுத்தால் பதவி

பண மோசடி புகாரில் தேடப்படும் குற்றவாளி ஒருவருக்கு கட்சியில் பெரிய பொறுப்பையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார் அந்தப் புள்ளி. மோசடி வழக்கில் சிக்கியவரை கட்சியில் சேர்ப்பதற்கு அவரிடம் பல லட்சங்களைப் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், தனது அணியில் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால் இத்தனை லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று கறாராக கேட்டு வாங்குவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. சமீபத்தில் கட்சியில் இருந்து விலகிய ஒருவரும், அவர் மீது புகார்களை அடுக்கி இருக்கிறாராம்.

மேலிடம் விசாரணை

மேலிடம் விசாரணை

மேலும், தமிழ்நாட்டில் பல இடங்களில் இயங்கும் ஹோட்டல் உட்பட முன்னணி தொழில் நிறுவனங்களிடமும், மிரட்டி பல லட்சங்களை கறந்திருக்கிறாராம் அந்தப் புள்ளி. இதுதொடர்பாக சில தொழிலதிபர்கள் மேலிடத்தில் போட்டுக் கொடுத்ததும் அலெர்ட் ஆகியுள்ளதாம் தகைமை. உடனே அவரை அழைத்து, யார் யாரிடம் எவ்வளவு வாங்கினீர்கள்? என மேலிட புள்ளிகள் கடுமையாக கேட்டிருக்கிறார்கள். வாங்கிய பணத்தையெல்லாம் உடனே செட்டில் செய்துவிடுங்கள் என கறாராகச் சொல்லிவிட்டார்களாம்.

வார்னிங்

வார்னிங்

பிரதமர் பெயரைச் சொல்லி, கட்சிப் பெயரைச் சொல்லி தொழிலதிபர்களிடம் வசூல் செய்ததெல்லாம், டாப் தலைவருக்கு தெரிந்தால் உங்களுக்கு ரொம்பச் சிக்கலாகிவிடும், இத்தோடு நிறுத்திக் கொள்லுங்கள் என எச்சரித்து அனுப்பி இருக்கிறார்களாம். இதனால், அதிர்ச்சியடைந்து, தலைமைக்கு யார் போட்டுக் கொடுத்தது என்ற விசாரணையில் இறங்கி இருக்கிறாராம் அந்த 'போலி ரசீது' புள்ளி.

அண்ணாமலை அப்செட்

அண்ணாமலை அப்செட்

ஏற்கனவே தமிழக பாஜகவில் பாலியல் சர்ச்சைகள், ஆடியோ, வீடியோ விவகாரங்கள் தலைவலியைக் கொடுத்து வரும் நிலையில், தனக்கு நெருக்கமானவரின் இந்த டீலிங் - கலெக்‌ஷன் மேட்டரால் கடுமையாக அப்செட் ஆகியுள்ளாராம் மாநிலத் தலைவர் அண்ணாமலை. எனக்கும், அவருக்கும் எந்த டீலிங்கும் இல்லை, என்ன ஆக்‌ஷன் வேண்டுமானாலும் எடுக்கலாம் என தலைமையை நோக்கி சரண்டராகி விட்டாராம். இந்த விவகாரம் தான் தற்போது பாஜக வட்டாரத்தில் அனலைக் கிளப்பி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+