• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இதான் பாஜக.. டென்ஷனில் "சாமி".. செம குழப்பத்தில் என்.ஆர்.காங்... யார் முதல்வர் வேட்பாளர்?

|

சென்னை: வடமாநிலங்களில் தன் கவனத்தை முழுவதுமாக செலுத்தி வந்தாலும், அப்படியே யூடர்ன் செய்து, தென்மாநிலம் பக்கமும் பார்வையை வீசி வருகிறது பாஜக.. அந்த வகையில், டார்கெட் செய்யப்பட்ட மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்று..!

  புதுச்சேரி: கழுத்தை அறுத்ததா பாஜக…? கூட்டணியில் இருந்து விலகும் என்.ஆர் காங்.!

  நாராயணசாமியை பொறுத்தவரை மிக மிக மூத்த தலைவர்.. ஒரு காரியத்தில் இறங்கினால் அசால்ட்டாக முடித்துவிடுவார்.. இவரது பலம் பற்றி சோனியா காந்திக்கு நன்றாகவே தெரியும்..
  கிரண்பேடி புதுச்சேரிக்கு வந்தபோது, சோனியா காந்தி அதிகம் நம்பிய நபர் நாராயணசாமிதான்.. ஏனென்றால், கூடங்குளம் பிரச்சனையை நாராயணசாமி எப்படி கையாண்டார் என்ற சூட்சுமத்தை நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்.

  மன்னிப்பு கேளுங்கள்... இல்லையென்றால் வழக்கு தொடர்வேன்... அமித் ஷா பேச்சுக்கு நாராயணசாமி பதிலடிமன்னிப்பு கேளுங்கள்... இல்லையென்றால் வழக்கு தொடர்வேன்... அமித் ஷா பேச்சுக்கு நாராயணசாமி பதிலடி

  நாராயணசாமி

  நாராயணசாமி

  அப்படிப்பட்ட நாராயணாசாமியை, 2016-ல் இருந்து புதுச்சேரியை கட்டி ஆண்ட நாராயணசாமியை, ஒரே செகண்ட்டில் தூக்கி அடித்தது பாஜக அரசு.. இதற்கு உடந்தையாக இருந்ததும் துணை போனதும் அதிமுக - என்ஆர் காங்கிரசும்தான்.. அந்த வகையில் ரங்கசாமியை மறந்துவிட முடியாது.. நாராயணசாமியை நினைக்கும்போதெல்லாம் ரங்கசாமியும் கண்முன்னாடி வந்து நிற்கத்தான் செய்கிறார்.

  புதுச்சேரி

  புதுச்சேரி

  பெரும்பான்மையை இழந்ததால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. ஒருவழியாக புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தப்பட்டுள்ளது.. இப்போது அடுத்த சிக்கல் வரப்போகும் தேர்தலை எப்படி புதுச்சேரி எதிர்கொள்ள போகிறது என்பதுதான்.. அவங்களுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடக்கிறது.. காங்கிரஸ், பாஜக கட்சிகளைச் சேர்ந்த தேசிய தலைவர்கள் புதுச்சேரி பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள்.. வாக்குகளையும் சேகரித்து வருகின்றனர்.

  அமித்ஷா

  அமித்ஷா

  இதனிடையே, அமித்ஷா முன்னிலையில், ஏராளமான முக்கிய பிரபலங்கள் பாஜகவிலும் இணைந்தனர்.. இனியும் பலர் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்களான நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் போன்றோர் பாஜகவில் இணைந்துவிட்டனர்.. இதுபோக ஒவ்வொரு புள்ளியும் இணைந்து வருவதால்தான் புதுச்சேரி காங்கிரஸ் தலையில் இடி விழுந்ததுபோல் உட்கார்ந்துள்ளது. எப்படியும் இந்த தாக்கம் வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. அதனால், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி நிமிர்ந்தெழுவது இனி டவுட்தான்.

  ஒத்துழைப்பு

  ஒத்துழைப்பு

  இன்னெரு பக்கம், ஏகப்பட்ட குழப்பத்தில் இருக்கிறார் ரங்கசாமி.. இவர்தான் எல்லாவற்றிற்கும் மூல காரணம்.. இவரது ஒத்துழைப்பு மட்டும் இல்லையென்றால் பாஜக, அப்படி ஒரு ஆபரேஷனை அந்த மாநிலத்தில் செய்திருக்குமா தெரியாது.. ஆனால், இப்போது உட்கார்ந்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாராம்.. பாஜக கூட்டணியிலேயே இருக்கலாமா? வேணாமா? தேர்தலை எப்படி எதிர்கொள்வது? என்று தன்னுடைய நிர்வாகிகளுடன் கூடி கூடி பேசி கொண்டிருக்கிறார். ஆனால், இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை..

  கூட்டணி

  கூட்டணி

  பாஜகவின் புதுச்சேரி மாநில தலைவர் சாமிநாதன், சமீபத்தில் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.. அதற்கு பிறகு ஆலோசனைகள் இன்னும் அதிகமாகி வருகிறதாம்.. ரங்கசாமிக்கு எதனால் இந்த குழப்பம் வந்தது என்று தெரியவில்லை.. ஒருவேளை நாராயணசாமிக்கு வந்த நிலைமைதான் நமக்கும் நாளைக்கு வருமோ என்று யோசிக்கிறாரா? அல்லது பாஜக எப்போது வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய கட்சி, அந்தவகையில் அதனை பகைத்து கொள்ளக்கூடாது என்று நினைக்கிறாரா தெரியவில்லை.

  கணக்கு

  கணக்கு

  ஏனென்றால், "புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமைக்கும்" என்று ஒத்த வார்த்தையை சொல்லிவிட்டு அமித்ஷா போயுள்ளார்.. அதற்கு அர்த்தம் இன்னும் முழுசாக தெரியவில்லை. அதுமட்டுமல்ல, இவ்வளவு விஷயங்களை பாஜகவுக்கு சாதகமாக செய்திருக்கிறோமே, அதனால் எப்படியும் தன்னை முதல்வர் வேட்பாளராக பாஜக நிறுத்தக்கூடும் என்று கனவில் மிதந்தார் ரங்கசாமி.. ஆனால், அது புஸ்ஸென்று போய்விட்டது..

  வேட்பாளர்

  வேட்பாளர்

  இந்த கோபமும் ரங்கசாமி மனசில் குடிகொண்டுள்ளது.. ஒருவேளை பாஜக நம்மை ஏமாற்றிவிட்டதோ? அல்லது இனியாவது தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருக்குமோ என்ற அடுத்த கனவில் ரங்கசாமி இறங்கி உள்ளதாகவும் தெரிகிறது. அதனால், முதல்வர் வேட்பாளர் என்றால் கூட்டணியில் தொடர்வது, இல்லாவிட்டால் பாஜகவை நம்பாமல் அடுத்த வேலையை கவனிப்பது என்ற முடிவுக்கும் வந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன..

  குழப்பம்

  குழப்பம்

  இந்தநேரத்தில் மேற்கு வங்கத்தையும் உதாரணம் காட்ட வேண்டி உள்ளது.. அந்த மாநிலத்தில் எங்கோ அதல பாதாளத்தில் ஒருசில வருடங்களுக்கு முன்பு தொங்கி கொண்டிருந்தது பாஜக.. வெறும் 16 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்து கொண்டு, 218 எம்எல்ஏக்கள் உடைய பலம்பொருந்திய திரிணாமுல் காங்கிரஸை எதிர்த்து வருவதையும், அந்த கட்சியின் முக்கிய தலைகளை தட்டி தூக்குவதையும் பார்த்தால், எதையும் செய்யும் பாஜக என்ற மனப்பான்மையே மேலோங்குகிறது.. இதைதான் நாராயணசாமியும் இந்நேரம் யோசித்து பார்த்திருப்பார்.. ரங்கசாமியும் இனி யோசித்து பார்ப்பார் என்று தெரிகிறது.. பார்ப்போம்..!

   
   
   
  English summary
  BJPs strategy in Puducherry Politics and Rangasamy plans to quit from the alliance
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X