Blood Moon: இன்று ரத்த நிலாவை செல்போனில் போட்டோ எடுப்பது எப்படி? DSLR கேமரா செட்டிங் இதுதான்!
சென்னை: இன்று இரவு வானில் ‛ரத்த நிலா' எனும் Blood Moon தெரிய உள்ளது. இன்று இரவு 8.58 மணி முதல் சந்திர கிரகணம் தொடங்க உள்ளது. இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12.22 மணி வரை ரத்த நிலாவை கண்டு ரசிக்கலாம். இந்த நேரத்தில் செல்போன் மற்றும் டிஎஸ்எல்ஆர் கேமராவில் ரத்த நிலாவை போட்டோ எடுப்பது எப்படி? அதற்கு எந்த மாதிரியான செட்டிங்ஸை பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஒவ்வொரு நாளும் வானில் பல அபூர்வமான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. ஆனால் நம் கண்களில் சில நிகழ்வுகள் மட்டுமே தென்படும். அந்த வகையில் இன்று வானில் அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளது. அதுதான் ‛ரத்த நிலா'. ஆங்கிலத்தில் ‛Blood Moon' என்று சொல்கிறார்கள்.

இன்று சந்திர கிரகணம் வருகிறது. சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும், நிலாவுக்கும் இடையே பூமி நேர்க்கோட்டில் வருவதாகும். இன்று இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இன்றைய இந்த சந்திர கிரகணத்தையொட்டி நிலா ரத்த நிறமாக காட்சியளிக்கும். இதனை தான் ரத்த நிலா என்று அழைக்கிறார்கள்.
82 நிமிட ரத்த நிலா
நம் நாட்டில் இந்த சந்திர கிரகணம் 82 நிமிடங்கள் வரை நீடிக்கும். அதாவது இன்று இரவு 8:58 மணிக்கு சந்திர கிரகண நிகழ்வு தொடங்க உள்ளது. இரவு 9.57 மணிக்கு பகுதி சந்திரகிரகணம் ஏற்படும். இதையடுத்து முழு சந்திர கிரகண நிகழ்வு ஆரம்பிக்கும்.
முழு சந்திர கிரகணத்துக்கான நிகழ்வு இரவு 11 மணிக்கு தொடங்கும். இரவு 11.41 மணிக்கு முழு சந்திரகிரகணத்தை நாம் பார்க்கலாம். இந்த சந்திர கிரகணம் நள்ளிரவு 12.22 மணி வரை நீடிக்கும். இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12.22 மணி வரை 82 நிமிடங்கள் வரை நிலா ரத்த நிறமாக தோன்றும்.
தமிழ்நாட்டில் பார்க்கலாம்
இது, கடந்த 10 ஆண்டுகளில் மிக நீண்ட கிரகணங்களில் ஒன்று என சொல்லப்படுகிறது. இந்த ரத்த நிலாவை நம் நாட்டு மக்கள் முழுமையாக பார்க்கலாம். டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புனே, லக்னோ, பாட்னா, ஜெய்ப்பூர் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் நகரங்களிலும் இருந்தும் இந்த ரத்த நிலாவை நாம் ரசிக்கலாம்.
நம் நாடு மட்டுமின்றி சீனா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் இந்த ரத்த நிலாவை பொதுமக்கள் ரசிக்கலாம். பொதுமக்கள் திறந்தவெளிகள், மொட்டை மாடிகள், மாடிகள் அல்லது பூங்காக்களைத் தேர்வு செய்யலாம். சூரிய கிரகணத்தை போலல்லாமல், சந்திர கிரகணத்தை கண்ணாடி அணியாமல் சாதாரணமாக நாம் பார்க்கலாம்.
போட்டோ எடுப்பது எப்படி?
ரத்த நிலாவை தெளிவாக பார்க்க வேண்டும் என்றால் பைனாகுலர்கள் அல்லது தொலைநோக்கிகளைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு மாவட்டங்களின் அறிவியல் மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அபூர்வமான இந்த ரத்த நிலாவை பலரும் செல்போன் மற்றும் டிஎஸ்எல்ஆர் கேமராக்களில் போட்டோ எடுக்கலாம். போட்டோகிராபி தெரிந்தவர்கள் என்றால் அதற்கேற்ப செட்டிங்கை பயன்படுத்தி ரத்த நிலாவை சூப்பராக போட்டோ எடுத்து விடுவார்கள். மாறாக பலரும் போட்டோ எடுக்க ஆர்வமாக இருந்தாலும் கூட அதற்கான செட்டிங்ஸ் குறித்து அறியாமல் இருக்கலாம். அவர்கள் இந்த விஷயத்தை செய்தால் போதும்.
டிஎஸ்எல்ஆர் கேமரா செட்டிங்
டிஎஸ்எல்ஆர் கேமரா வைத்திருப்போர் என்றால் 200 எம்எம் அல்லது லாங்கர் லென்ஸை பயன்படுத்த வேண்டும். அதேபோல் Tripod-யில் கேமராவை வைத்து மேனுவல் மோடில் ரத்த நிலாவை படம் பிடிக்கலாம். மேனுவல் மோடில் ஐஎஸ்ஒவை 400 முதல் 800 என்ற அளவில் வைத்திருக்க வேண்டும்.
அதேபால் aperture மதிப்பை F/5.6 அல்லது Wider-ல் வைத்திருக்க வேண்டும். அதன்பிறகு ஷட்டர் ஸ்பீட் அளவை 1/125S முதல் ஒரு செகன்ட் வரை வைத்திருக்கலாம். அதற்கு முன்பாக போட்டோவை RAW -வாகவும், மேனுவல் ஃபோக்கஸ் முறையில் வைத்திருப்பது ரத்த நிலாவை அழகாக படம் பிடிக்க முடியும்.
செல்போனில் எடுப்பது எப்படி?
எங்களிடம் டிஎஸ்எல்ஆர் கேமரா இல்லை. ஸ்மார்ட் போன் தான் இருக்கிறது என்று சொன்னாலும் பரவாயில்லை. நீங்களும் ரத்த நிலாவை சூப்பராக போட்டோ எடுக்கலாம். அதற்கு முதலில் போனில் கேமராவை ஆன் செய்தவுடன் டைமர் மோடை பயன்படுத்தி நிலாவை போட்டோ எடுக்கலாம். இல்லாவிட்டால் நைட் அல்லது astrophotography அல்லது Super Moon மோடை பயன்படுத்தலாம்.
அதேபோல் கேமராவில் PRO அல்லது மேனுவல் மோடுக்கு சென்று மேற்கூறிய டிஎஸ்எல்ஆர் செட்டிங்கை செட் செய்து ரத்த நிலாவை போட்டோ எடுக்கலாம். ஆனால் இதற்கு Tripod கட்டாயம் இருக்க வேண்டும். ஒருவேளை ட்ரைபாட் இல்லாதவர்கள் போனை குறிப்பிட்ட இடத்தில் அசையாமல் வைத்து எடுக்க வேண்டும். செல்போனில் போட்டோ எடுக்கும்போது எந்த காரணம் கொண்டும் நாமாகவே Zoom செய்ய வேண்டாம். அது போட்டோவை சேதப்படுத்தும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications