தேசிய நாயகன் அம்பேத்கர்! சாதி வலியில் பிறந்து, அரசியல் சட்டத்துக்கு உயிர் கொடுத்த லீடர்! நினைவு நாள்
சென்னை: சட்ட மேதை அம்பேத்கரின் 70வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சட்ட மேதை அம்பேத்கரின் 70வது நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் அம்பேத்கருக்கு புகழாரம் செலுத்தி வருகின்றார்கள்.. அந்தவகையில், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலினும் அம்பேத்கருக்கு புகழஞ்சலியை பதிவிட்டுள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட எல்லா மக்களுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்த தேசிய தலைவர் ஆவார்..

டாக்டர் அம்பேத்கர்
அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து பல கஷ்டங்களையும் அவமானங்களையும் பார்த்தவர்.. எல்லா துன்பங்களையும் கடந்து கல்வியை ஆயுதமாக்கி தொடர்ந்து படித்தார் . அமெரிக்காவில் முனைவர் பட்டமும் பெற்றார்..
இந்தியா விடுதலை பெற்று நேரு தலைமையிலான அரசு அமைக்கப்பட்டபோது முதல் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இந்த நாடே வியக்கும் விதத்தில் சட்ட வரைவு குழுவின் தலைவராக இருந்து அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதி முடித்தார்.
இந்தியாவின் அரசியல் சட்டம் முதல் முறையாக திருத்தப்பட்ட நிலையில், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் அம்பேத்கரின் பங்கு மிக மிக முக்கியமானது.
அரசியல் அமைப்பு சட்டம்
அரசியல் அமைப்பு சட்டமானது, இந்திய நாட்டின் பழமையான போக்கை உடைத்து பல புதுமையை விதைத்தது.. அவர் சட்ட அமைச்சராக இருந்தபோது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், 'இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்' (OBC) என்ற ஒரு புதிய பிரிவையும் உருவாக்கினார். ஆனால் ஓபிசி மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்கவில்லை என்று கூறி, அப்போதைய நேரு அரசை வலுவாக கண்டித்தார்.
இட ஒதுக்கீடு என்பது ஏழைகளுக்கு மட்டும் அல்ல, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களுக்கே என்று உறுதியாக சொன்னார் அம்பேத்கர். பொருளாதார வசதியை மட்டும் வைத்து இட ஒதுக்கீடு தருவதை அவர் ஏற்கவில்லை. இந்து சமூகத்தில் பெண்களுக்கு சொத்துரிமை, விவாகரத்து பெறும் உரிமை போன்றவற்றை வழங்க "இந்து சட்டத்தொகுப்பு மசோதா"வை கொண்டுவந்தார்.
பிற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் இந்த சட்டத்தை ஏற்காததால், பெண்கள் உரிமைக்காக தன்னுடைய சட்ட அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தார்.
சமத்துவம், சமூக நீதி
அம்பேத்கரின் போராட்டம் குறுகிய வட்டாரத்தில் நின்றுவிடவில்லை. வெறும் சாதியை பற்றி மட்டும் அம்பேத்கர் பேசவில்லை. மதம், பெண் என எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக அவர் குரல் கொடுத்தார்... சமத்துவம் மற்றும் சமூக நீதியை வலியுறுத்தி கொண்டேயிருந்தார்..
அம்பேத்கர் சிறந்த பொருளாதார மேதையாகவும் திகழ்ந்தார்.. இந்திய ரிசர்வ் வங்கி உருவாக அவர் அளித்த ஆலோசனைகள் முக்கியமானவை. குறிப்பாக, ரூபாயின் சிக்கலும் தீர்வும்' என்கிற அவருடைய ஆய்வு புத்தகத்தை அடிப்படையாக கொண்டு தான் இந்திய ரிசர்வ் வங்கி அதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது
8 மணி நேர பணிகள்
அதேபோல. தொழிலாளர்களுக்கு செய்த மிக முக்கியமான பணி, 'வேலை நேரம் ஒரு நாளைக்கு எட்டு 8 மணி நேரம் மட்டுமே' என்ற சட்டத்தை கொண்டுவந்ததுதான். பொருளாதாரம், இலக்கியம், தத்துவம் உள்ளிட்ட பல துறைகளிலும் அவர் மிகப்பெரிய அறிவாளியாக இருந்தார்
அதேபோல. தொழிலாளர்களுக்கு செய்த மிக முக்கியமான பணி, 'வேலை நேரம் ஒரு நாளைக்கு எட்டு 8 மணி நேரம் மட்டுமே' என்ற சட்டத்தை கொண்டுவந்ததுதான். பொருளாதாரம், இலக்கியம், தத்துவம் உள்ளிட்ட பல துறைகளிலும் அவர் மிகப்பெரிய அறிவாளியாக இருந்தார்
வாழ்நாள் முழுவதும் சாதியால் துன்பப்பட்டவர் என்பதால், சாதியை ஒழிக்கவே 'சாதி ஒழிப்பு' உள்ளிட்ட நூல்களை எழுதினார்.
முன்னோடி - புகழாரம்
சாதி, மத, பொருளாதாரம், பெண்கள் உரிமைகள், கல்வி, சட்டம் என பல துறைகளிலும் முன்னோடியாக திகழ்ந்தவர் அம்பேத்கர்.. அவர் வாழ்ந்த காலத்திலும், மறைந்த பிறகான காலத்திலும் அவரின் செல்வாக்கும், செயல்பாடுகளும் இந்திய சமூகத்திற்கு வழிகாட்டும் விசுவாசமான முன்னோடியாக இருந்து வருகிறது இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட எக்ஸ் பதிவில், மகா பரிநிர்வண் தினமான இன்று டாக்டர் அம்பேத்கரை நினைவு கொள்வோம். அவரின் தொலைநோக்குத் தலைமைத்துவமும், நீதி, சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு ரீதியான உறுதிப்பாடும்நமது தேசிய பயணத்தைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன. நாட்டை மேம்படுத்த அம்பேத்கரின் கொள்கை பாதைகள் மேலும் ஒளிர செய்யும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications