"பிசி" இடஒதுக்கீட்டை எதிர்த்த “பிராமணர்கள்”.. இந்துக்களுக்கு “எதிரி” யார்? இந்துவில் “2 வகை” -ஆ.ராசா
சென்னை: பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பெரியார் கொண்டு வந்தபோது அதை எதிர்த்து பிராமணர்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், யார் இந்துக்களின் எதிரி என திமுக எம்பி ஆ.ராசா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆ.ராசா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆ.ராசா தன்னுடைய உரையில், "கிறிஸ்துவராகவோ இஸ்லாமியராகவோ பெர்சியராகவோ இல்லாவிட்டால் நீ இந்துதான் என உச்சநீதிமன்றம் சொல்கிறது.
இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்.

இந்துத்துவ அமைப்புகள் போராட்டம்
எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவராக இருக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை உரக்க எழுப்பினால்தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும். விடுதலையும் முரசொலியும் தி.க.வும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என ராசா பேசும் வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்துக்களுக்கு யார் எதிரி?
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆ.ராசா, "இந்துக்களுக்கு ராசா எதிரியா? இந்துக்களுக்கு கருணாநிதி எதிரியா? கண்ணப்பன் எதிரியா? வேலு எதிரியா? இல்லை நீங்கள்தான் எதிரியா? இந்துக்களுக்கெல்லாம் யாரும் எதிரியில்லை? 1951ல் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தார் பெரியார். அது வேண்டாம் என்று 2 பிராமணர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு
உச்சநீதிமன்றம் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செல்லாது என்றது. யார் பிற்படுத்தப்பட்ட மக்கள்? கவுண்டர், தேவர், நாடார், யாதவர், வன்னியர், செட்டியார், நாயுடு இவர்கள் தானே. இவர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டது திராவிடர் கழகம், பெரியார், அண்ணா. 60% பிற்படுத்தப்பட்ட மக்களை இந்துக்கள் என்று வைத்திருக்கிறார்கள். அந்த இந்துக்களுக்காக உச்சநீதிமன்றம் சென்று போராடி அவர்களுக்கான இடஒதுக்கீடு பெற்றுத்தந்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.

இந்துக்களுக்கு இடஒதுக்கீடு
அதற்கு பிறகே மண்டல் கமிஷன். இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் வரவேயில்லை. அவர்களுக்கு 1946 ஆம் ஆண்டிலேயே அம்பேத்கர் வெள்ளையரிடமே வாங்கிவிட்டார்கள். அதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நான் பேசுவது இந்துக்களில் இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட மக்கள் பற்றி. இவர்களுக்கெல்லாம் மத்திய அரசிடம் இட ஒதுக்கீடு கேட்டோம். நீங்கள் எல்லோரும் இந்துக்கள் தானே. இந்துக்களுக்கு தானே இட ஒதுக்கீடு கேட்டோம்.

பிராமணர்கள்
இதை எதிர்த்தவர்கள் யார். இதை எதிர்த்தவர்கள் எல்லாம் பிராமணர்களும், ராஜபுத்திரர்களும் உயர் சாதியினரும். அவர்களும் இந்துக்கள்தான். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 5 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் கையில் துடைப்பத்தை ஏந்தி, 'நீங்கள் எல்லாம் படிக்க வந்துவிட்டீர்கள். நாங்கள் இந்த வேலைக்குதான் போகவேண்டும்.' என்று ஊர்வலம் சென்றதை இல்லை என்று சொல்ல முடியுமா?

இந்துக்களில் 2 வகை
இந்துக்களாக இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கூடாது, உரிமை வேண்டாம் என்று சொன்ன இந்து யார்? இவரும் இந்து. அவரும் இந்து. நான் இந்த தேசத்துக்கு சொல்ல விரும்புகிறேன். இந்துவிலே இரண்டு வகை. நான் சொல்லவில்லை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்கிறார். அரசியல் சட்டத்தை காப்பாற்றுவேன் என உறுதிமொழியேற்ற நீங்கள் ஏன் சனாதனத்துக்கு ஆதரவாக பேசுகிறீர்கள்." என்றார்.
-
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
செந்தில் பாலாஜின்னா தனி ரகம்! 200000 ஓட்டுக்காக வேலுமணி தந்த ஸ்டார் ஓட்டல் ட்ரீட்.. உடனே ட்விஸ்ட் -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
அதிமுக, பாஜக கதை அவ்ளோ தான்.. கோவை தெற்கில் குடியேறும் செந்தில் பாலாஜி.. அதுவும் எங்க தெரியுமா? -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்! -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
கோவையின் அஸ்திவாரத்திலேயே கை வைத்த செந்தில் பாலாஜி.. மொத்தமாக மாறும் களம் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி












Click it and Unblock the Notifications