சரவெடி.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு.. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி!
கொரோனா காரணமாக இந்தியா முழுக்க மக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது.
சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றை அரசு வெளியிட்டு உள்ளது.
கடந்த 2019ல் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளிடையே இந்த தொற்று ஏற்படுத்திய பாதிப்புகளின் தாக்கம் இன்றளவும் நீடித்து வருகிறது.
இந்த தொற்றால் தற்போது வரை சுமார் 65.8 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் உலக வல்லரசான அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.

இந்தியா
இந்தியாவில் அதிகாரபூர்வமாக இதுவரை கொரோனாவிற்கு 5,24,715 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க இதுவரை 678,605,775 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6,790,561 பேர் இதுவரை கொரோனா காரணமாக உலகம் முழுக்க பலியாகி உள்ளனர். 651,210,715 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு முடிந்தாலும் இன்னும் பல நாடுகளில் குறைந்த அளவிலான கேஸ்கள் ஏற்பட்டு வருகின்றன. சீனா போன்ற நாடுகளில் சமீபத்தில் ஏற்பட்ட அலை கொஞ்சம் கொஞ்சமாக முடியும் நிலையை எட்டி உள்ளது.

ஊரடங்கு
இந்த கொரோனா காரணமாக இந்தியாவில் 2020ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின் ஜூன் மாதம் முடியும் வரை ஊரடங்கு இருந்தது. இந்தியா முழுக்க மக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. மக்கள் எங்கேயும் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்கு உள்ளேயே இதனால் சிக்கி தவித்து வந்தனர். முக்கியமாக வேலைக்கு செல்லும் மக்கள் வீட்டிலேயே முடங்கினர். ஐடி ஊழியர்கள் பலர் எளிதாக வீட்டில் இருந்து வேலை பார்க்க முடிந்தது. இவர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் தொழிற்சாலை பணியாளர்கள் பலர் வேலைக்கு கஷ்டப்பட்டு செல்ல வேண்டிய நிலையும், அல்லது வேலையை விட வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்கள் யாருக்கும் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வாய்ப்புகள் தரப்படவில்லை. இருந்தாலும் பலர் கொரோனாவிற்கு அஞ்சி வீட்டில் முடங்கினர். உடல் நிலை மோசமாகிவிடும். வயது காரணம். உயிருக்கு ஆபத்து என்பதால் வீட்டிற்கு உள்ளேயே இவர்கள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் இவர்கள் அலுவலகம் வராத நாட்கள் விடுப்பு நாட்களாக கணக்கில் எடுக்கப்பட்டது. இதனால் பலருக்கு சம்பளத்தில் கை வைக்கப்பட்டது. சிலர் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தாலும் விடுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதெல்லாம் அவர்கள் லாஸ் ஆப் பே பதிவில் ஏற்றப்பட்டது.

புதிய விதி
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றை அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி மார்ச் 25 முதல் ஜூன் 30 ம் தேதி 2020 வரை அரசு ஊழியர்கள் எடுத்த விடுப்புகளை சிறப்பு விடுமுறை அல்லது பணி செய்ததாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பின்னர் 2021 ல் மே 10 முதல் மே 24 வரை இரண்டாவது லாக் டவுனில் எடுக்கப்பட்ட விடுப்புகளையும் சிறப்பு விடுமுறை அல்லது பணி செய்ததாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதாவது இந்த நாட்களில் விடுப்பு எடுத்ததை லாஸ் ஆப் பே ஆக கருத கூடாது என்று கூறப்பட்டு உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications