சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடர்.. ஒன்றாக களமிறங்கும் அர்ஷ்தீப் சிங் - பும்ரா.. என்ன திட்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டுகளான பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் முதல்முறையாக ஒரே போட்டியில் விளையாடுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதில் டி20 தொடரின் முதல் ஆட்டம் திருவனந்தபுரத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி தொடர் இதுவாகும். இதனால் இந்தத் தொடரை இந்திய அணி சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும்.

ஓபிஎஸ் கையில் 3+1 ஆப்ஷன்கள்.. டெல்லி கைவிட்டாலும்.. இருக்கு மெகா அஸ்திரம்.. ரிப்போர்ட் லீக் ஆகுமாம்! ஓபிஎஸ் கையில் 3+1 ஆப்ஷன்கள்.. டெல்லி கைவிட்டாலும்.. இருக்கு மெகா அஸ்திரம்.. ரிப்போர்ட் லீக் ஆகுமாம்!

இந்திய அணி திட்டம்

இந்திய அணி திட்டம்


முக்கியமாக இறுதிக்கட்ட பந்து வீச்சு மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பை வழங்குவதில் இந்திய அணி நிர்வாகம் கவனம் செலுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. முகமது ஷமி கொரோனா தொற்றில் இருந்து குணமடையவில்லை என்பதால் அவரும் பங்கேற்கவில்லை. இதனால் இந்திய அணியின் பந்துவீச்சு நிச்சயம் பரிசோதிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பை திட்டம்

உலகக்கோப்பை திட்டம்

குறிப்பாக உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், சாஹல் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரை பயன்படுத்த திட்டம் வைத்துள்ளது. இதன் மூலம் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் இறுதி ஓவர்களில் பயன்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பும்ரா - அர்ஷ்தீப் சிங்

பும்ரா - அர்ஷ்தீப் சிங்

இங்கிலாந்து தொடருக்கு பின் ஆஸ்திரேலியா டி20 தொடரிலேயே பும்ரா களமிறங்கினார். அந்த தொடரில் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஓய்வளிக்கப்பட்டது. தற்போது இந்தத் தொடரில் இருவரும் முதல்முறையாக ஒன்றாக களமிறங்கியுள்ளனர். யார்க்கர்கள் வீசுவதில் வல்லவரான அர்ஷ்தீ சிங்கும், டெத் ஓவர்கள் ஸ்பெஷலிஸ்டான பும்ராவும் தென் ஆப்பிரிக்க அணிக்கு சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்முறை

முதல்முறை

ஆசியக் கோப்பைத் தொடர்களில் முதல் சில ஓவர்களில் சொதப்பலாக அரஷ்தீப் சிங் பந்துவீசினாலும், இறுதி ஓவர்களில் அமர்க்களப்படுத்தினார். இதனால் ஹர்சல் படேலுக்கு பதில், அர்ஷ்தீப் சிங்கிற்கு உலகக்கோப்பைத் தொடரில் வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், புவனேஷ்வர் குமார் இறுதி ஓவர்களில் அதிக ரன்கள் விட்டுக் கொடுப்பதால், அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ராவே இறுதி ஓவர்களில் பந்துவீச உள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அர்ஷ்தீப் சிங்கும் வருகையால் புவனேஷ்வர் குமாரும் சிரமமின்றி புது பந்தில் பந்துவீசி வாய்ப்பு இருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இடதுகை பந்துவீச்சாளருக்கான தேவையையும் இந்திய அணியால் நிறைவேற்றிக் கொள்ள முடியும். இதனால் இன்றைய போட்டியில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் இருவரும் பந்துவீசுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
India's death over specialists Bumrah and Arshdeep Singh playing in the same match for the first time has raised expectations among the fans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X