சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சிஏஜி ரிப்போர்ட்".. 5 வருடம் நடந்தது என்ன? ஒவ்வொரு துறையாக கணக்கு காட்ட முடிவு.. பிடிஆர் அஸ்திரம்!

Google Oneindia Tamil News

சென்னை: 5 வருட சிஏஜி ரிப்போர்ட் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்த நிலையில் இன்று மின்சார துறைக்கான சிஏஜி அறிக்கை வெளியிடப்பட்டது.

Recommended Video

    PTR விளக்கம் | Petrol Diesel விலை எப்போ குறையும்? | TN Assembly | Oneindia Tamil

    ஒரு அரசின் நிதி செலவினங்கள் எவ்வளவு, கடன் எவ்வளவு, லாபம் என்ன, ஒவ்வொரு துறையிலும் இழப்பு எவ்வளவு என்று சிஏஜி அறிக்கை வருடா வருடம் வெளியிடப்படும். மத்திய அரசின் செலவினங்கள் குறித்து ஒரு பக்கம் சிஏஜி அறிக்கை வெளியிடப்படுவது போல இன்னொரு பக்கம் மாநில அரசுகளின் செலவினங்கள் குறித்து சிஏஜி அறிக்கை வெளியாகும்.

    மாநில அரசுகளின் சிஏஜி அறிக்கையை நிதி அமைச்சர் பொதுவாக சட்டசபையில் பொதுவில் வெளியிடுவது இத்தனை வருடமாக வழக்கத்தில் இருந்தது.

    ஜஸ்ட் அப்பதான் ஸ்டாலின் அறிவித்தார்.. உடனே அறிவிப்பு.. கூடுகிறது அமைச்சரவை.. திரும்புகிறது வரலாறு..!ஜஸ்ட் அப்பதான் ஸ்டாலின் அறிவித்தார்.. உடனே அறிவிப்பு.. கூடுகிறது அமைச்சரவை.. திரும்புகிறது வரலாறு..!

    ஆனால்

    ஆனால்

    ஆனால் கடந்த 5 வருடமாக தமிழ்நாட்டின் சிஏஜி அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. சிஏஜி தளத்தில் இந்த ரிப்போர்ட் வெளியிடப்பட்டுவிட்டாலும், முந்தைய அரசு முறையாக இதை சட்டசபையில் வெளியிடவில்லை. பொதுவில் அரசு சிஏஜி ரிப்போர்ட் குறித்து வாய் திறக்கவில்லை. இதனால் தமிழ்நாடு அரசின் நிதி செலவினங்கள் என்ன, எவ்வளவு இழப்பு என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரியாமல் இருந்தது.

    என்ன

    என்ன

    இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் 5 வருட சிஏஜி ரிப்போர்ட் வெளியிடப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் தெரிவித்து இருந்தார். 5 வருடமாக இதை வெளியிடவில்லை. காரணமே சொல்லாமல், இதை வெளியிடாமல் வைத்து இருந்தனர். இந்த சிஏஜி அறிக்கையை நாங்கள் வெளியிடுவோம் என்று பிடிஆர் அறிவித்து இருந்தார். நேற்று இந்த அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    ஆனால் நேற்று அறிக்கை வெளியிடப்படாத நிலையில் இன்று மின்சார துறை தொடர்பான சிஏஜி அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி மின்சார துறையில் அதி்முக ஆட்சியின் முறைகேட்டால், தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்துக்கு 424 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 3.30 க்கு கொள்முதல் செய்ய வேண்டிய மின்சாரத்தை 12 ரூபாய்க்கு வாங்கி முறைகேடு செய்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின்சாரம்

    மின்சாரம்

    ஜிஎம்ஆர் கார்பரேஷன் மின் நிறுவனத்திடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் முறைகேடு இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மின்சார துறை இழப்பு தொடர்பாக நேற்று அவையில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த காலங்களில் மின் வாரியத்தில் ஏற்பட்ட தவறுகளை சரி செய்து வருகிறோம். முந்தைய ஆட்சியில் செய்யப்பட்ட அதிக செலவினங்களை சரி செய்து வருகிறோம். முக்கியமாக மின் பகிர்மான கழகத்தில் 1 லட்சத்து 33 ஆயிரம் கோடி மின் துறைக்கு கடன் இருக்கிறது. இது போக மின் தொடரமைப்பு கழகத்தில் 25 ஆயிரம் கோடி கடன் உள்ளது.

    கடன்

    கடன்

    மொத்தம் மின்வாரிய துறைக்கு 1.50 லட்சம் கோடி கடன் உள்ளது. இதற்கு வட்டி மட்டுமே ஒரு வருஷத்துக்கு 13 ஆயிரம் கோடி சென்ற ஆட்சியில் கட்டி உள்ளனர் . வட்டி விகிதம் மட்டுமே 9.5 முதல்வர் 13% வரை உள்ளது, என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் இதற்கான சிஏஜி ரிப்போர்ட் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சிஏஜி ரிப்போர்ட் தற்போது வெளியாகி உள்ளதால் கடந்த 5 வருடங்களில் என்னென்ன செலவுகள் செய்யப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகும்.

    கணக்கு

    கணக்கு

    சிஏஜி ரிப்போர்ட் மூலம் எந்தெந்த துறைகளில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்று நிதி அமைச்சர் பிடிஆர் வரும் நாட்களில் விவரங்களை வெளியிட வாய்ப்புகள் உள்ளது. பல பூதங்களை இது வெளியே கொண்டு வரும். மின்சார துறை என்று இல்லாமல் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு செலவு செய்யப்பட்டது. எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்று முழு பட்டியலை பிடிஆர் வரும் நாட்களில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு கடந்த 5 வருடம் என்ன நடந்தது என்று நிதிநிலை வெள்ளை அறிக்கையையும் பிடிஆர் வெளியிட இருப்பதால் பல்வேறு முக்கிய விஷயங்கள் வெளியே வர வாய்ப்புகள் உள்ளன.

    English summary
    CAG report: TN Finance Minister PTR may release complete audit details soon on every department.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X