IAS ராதாகிருஷ்ணன் ஏன் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார் தெரியுமா.. பதவிக்கு ஆபத்தா.. திடீர்னு பெருகும் ஆதரவு
ஐஏஎஸ் ராதாகிருஷ்ணன் பதவிக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்
சென்னை: ஐஏஎஸ் ராதாகிருஷ்ணன் பதவிக்கு சிக்கல் ஏற்படலாம் என்று சொல்கிறார்கள்.. ஆனாலும் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவுகள் பெருகி வருவதை மறுக்க முடியாது.
6 வருடங்கள் கழித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, கடந்த வாரம் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும், மயக்கமடைந்த பிறகு, அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கை பகீரை கிளப்பிவிட்டுள்ளது.

IAS ராதாகிருஷ்ணன்
சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது... இதை ஏற்று தமிழக அரசும் விசாரிப்பதாக சொல்லி உள்ளது.. இந்த லிஸ்ட்டில் ராதாகிருஷ்ணன் சேர்க்கப்பட காரணம், "ஜெயலலிதாவை ஏன் வெளிநாடு அழைத்து செல்லவில்லை" என்ற ஆணையத்தின் கேள்விக்கு, "அது இந்திய மருத்துவர்களை அவமானப்படுத்தும் செயல்" என்று ராதாகிருஷ்ணன் பதில் சொன்னாராம்.. கால்நடை மருத்துவராக இருந்து கொண்டு இப்படி பதில் சொன்னதுதான் ஆணையத்துக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம்..

இடியாப்ப சிக்கல்
ஏற்கெனவே ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் சாராம்சம் தெரிந்ததால்தான், அவர் சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார் என்றும் இப்போது சொல்லப்பட்டு வருகிறது.. சசிகலா, விஜயபாஸ்கர் ஆகியோருடன் ராதாகிருஷ்ணனையும் விசாரிக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் அவரின் இப்போதைய பதவிக்கும் சிக்கல் வந்துள்ளதாக தெரிகிறது.. ராதாகிருஷ்ணன் மீது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு சட்ட ஆலோசனைகளையும் தொடங்கி உள்ளதாக தெரிகிறது.

ராதாகிருஷ்ணன் IAS
இருந்தாலும், இந்த லிஸ்ட்டில் ராதாகிருஷ்ணன் பெயர் உள்ளதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த வருகின்றனர்.. பல அரசியல் விமர்சகர்கள், தலைவர்கள் இதுகுறித்து தொடர்ந்து கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.. அந்தவகையில், ஓபிஎஸ், எடப்பாடி பெயர்கள் ஏன் இதில் சேர்க்கப்படவில்லை என்றுதான் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. நம் ஒன் இந்தியா சேனலுக்கு 2 நாட்களுக்கு முன்பு மூத்த பத்திரிகையாளர் ஆர்கே ராதாகிருஷ்ணன் ஒரு பேட்டி தந்திருந்தார். அந்த பேட்டியில் சில விஷயங்களை வெளிப்படையாகவே பேசியிருந்தார்.

டென்ட்
யாரை ஓங்கி அடிக்க முடியாதோ அவர்களை பலிஆடு ஆக்கிவிடுவதுதான் கமிஷனின் வேலை.. ராதாகிருஷ்ணன், ராம்மோகன்ராவ், அப்போலா 3 டாக்டர்கள், அதிகார பலம் இல்லாத சசிகலா, விஜயபாஸ்கர் இப்படி கோர்த்துவிட்டுள்ளனர். இன்னைக்கு அதிகாரத்தில் உள்ளவர்களை ஏதாவது கேள்வி கேட்டிருக்கிறார்களா? ஏன், அன்னைக்கு டெல்லியில் இருந்து அமித்ஷா வந்து போகலையா? மோடி வந்து போனாரே? அமைச்சர்கள் வந்து போனார்களே? வெங்கய்யா நாயுடு இங்கேயேதான் டென்ட் போட்டு உட்கார்ந்துட்டு இருந்தாரு.. யாரையுமே இவங்க எதையுமே விசாரிக்கவில்லை.

என்கொயரி
யார் மீதெல்லாம் காழ்ப்புணர்ச்சி உள்ளதோ, அவர்கள் மீதெல்லாம் ஆறுமுகசாமி புழுதி வாரி இறைத்துள்ளார்.. ராதாகிருஷ்ணன் மீதும் தனிப்பட்ட பகை இருக்கிறது என்று கூறியிருந்தார். அதுமட்டுமல்ல, ராதாகிருஷ்ணன் மிகச்சிறந்த திறமையான அதிகாரி.. அதுக்காக, ஒரு மாநில முதல்வர் உடல்நலம் குறித்த விவகாரங்களில், மருத்துவ துறை செயலாளர்தான் முடிவெடுப்பாரா? தலைமை செயலாளருக்கே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உரிமை இல்லாத நிலையில், மருத்துவதுறை செயலாளர் எப்படி மூக்கை நுழைக்க முடியும் என்றும் பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.. ஒருபக்கம் விசாரணைகள் பாயஉள்ள நிலையில், நாலாபக்கமும் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவும் பெருகி வருவது கவனிக்கத்தக்கதாக உள்ளது..!!












Click it and Unblock the Notifications