கொல்லைப்புற வழியாக அதிமுகவை ஆட்சியில் அமர்த்த பாஜக முயற்சி.. சிபிஎம் பொதுச்செயலாளர் பேபி!
மதுரை: அதிமுகவை ஆட்சியில் அமர பாஜக பின்வாசல் வழியாக முயற்சிப்பதாக சிபிஎம் தேசிய செயலாளர் எம்.ஏ.பேபி குற்றம்சாட்டியுள்ளார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு எதிரானவும் மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளதாக கூறிய எம்.ஏ.பேபி, விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாகவும் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்க சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இரு கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என்று கூறியுள்ள இரு கட்சிகளும், வெளியில் இருந்து ஆதரவு கொடுப்போம் என்று அறிவித்துள்ளன. இதனால் தவெக தலைவர் விஜய் நேற்று இரவு சிபிஐ மற்றும் சிபிஎம் அலுவலகங்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.

இதனிடையே திமுக மற்றும் அதிமுக இடையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் பேபி பேசி இருந்தார். இது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி பங்கேற்றார். அதன்பின் எம்.ஏ.பேபி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தவெகவுக்கு ஆளுநர் மூலமாக தொல்லை கொடுக்கின்றனர்.
தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட வேண்டும். நல்ல முறையில் பேசி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளோம். தமிழக ஜனநாயக கலாச்சாரத்தை பொறுத்தே தவெகவுக்கு சிபிஎம் ஆதரவு அளித்துள்ளது. பெரும்பான்மை பட்டியலை கேட்கும் ஆளுநரின் பின்னணியில் பாஜக உள்ளது.
மதவாத சக்திகளுக்கு எதிரான விஜய் இருப்பார் என்றே சிபிஎம் ஆதரவு அளித்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க சொல்வது ஆளுநர் வேலை இல்லை. டெல்லியில் தலையீட்டால் தமிழ்நாட்டுல் மக்கள் தீர்ப்புக்கு எதிரான செயல்பட முடிவு செய்திருக்கிறார்கள். அதிமுக மூலம் பின்வாசல் வழியாக ஆட்சி அதிகாரத்திற்கு வர பாஜக முயல்கிறது. சிபிஎம் எப்போதும் குதிரை பேரத்திற்கு எதிரான கட்சி.தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடப்பதாக வரும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநரே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
-
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக!












Click it and Unblock the Notifications