புளூ கலர் மர்மம்.. வாக்கு போட்டும் அழியாத நீல குறி எப்படி உருவாகுது? தேர்தல் மையின் அறிவியல் உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் வந்துவிட்டாலே நம்முடைய எல்லோருடைய விரல்களிலும் இடம்பிடிக்கும் அந்த சிறு நீல நிறக் குறி, வெறும் மை கிடையாது, அது ஒரு நாட்டின் ஜனநாயக நேர்மையை உறுதிப்படுத்தும் மிகச்சிறந்த அறிவியல் ஆயுதம் என்றே சொல்லலாம்.. ஒருமுறை வாக்களித்தவர் மறுபடியும் வாக்களிப்பதைத் தடுக்கும் இந்த "அழியாத மை"யை, ஆங்கிலத்தில் Indelible Ink என்பார்கள்.. இந்த மை எப்படி செயல்படுகிறது? இதன் பின்னணியில் உள்ள சுவாரசியமான அறிவியல் தகவல்கள் என்னென்ன? என்பதைப் பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

தேர்தல் முடிந்ததுமே ஒரு நபர் மீண்டும் ஓட்டு போட முடியாமல் தடுப்பதற்காக இந்தியாவில் பயன்படுத்தப்படும் முக்கியமான முறைகளில் ஒன்று "மறையாத மை ஆகும்.. இந்த மை பொதுவாக வாக்காளரின் வலது கை சுட்டுவிரலில், ஓட்டு பதிவு செய்த உடனே பூசப்படுகிறது..

Election Ink Silver Nitrate Mysore Paints Election Commission of India Voter Awareness Indian Science Democracy Voting Rights Tamil Nadu Assembly Election 2026 Fact Check Mystery of Election Ink National Physical Laboratory Electoral Integrity Fake Vote Prevention General Elections 1962 Elections History Indelible Ink Voter Finger Mark 1962 2026

இந்த மையின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? இது சாதாரண தண்ணீரால் கழுவினாலும் அழியாது.. சோப்பு போட்டு கழுவினாலும் அழியாது..

இந்த மையின் முக்கிய அடிப்படை ரசாயனம் "சில்வர் நைட்ரேட்" ஆகும்.. இது தோலின் மேல்தோல் பகுதியுடன் வேதியியல் மாற்றம் ஏற்படுத்தி, அழியாத கறை உருவாக செய்கிறது.. இப்படியொரு சூப்பர் யோசனை, முதல் தேர்தல் முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் முக்கிய கருவியாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது..

எப்படி மை செயல்படுகிறது

இந்த மை விரலில் வைக்கப்பட்டவுடன், அது தோலில் உள்ள புரதச்சத்துடனும், இயற்கையாக இருக்கும் ஈரப்பதத்துடனும் வினைபுரிகிறது. இந்த வேதிவினையின் விளைவாக, அது தோலில் ஒரு நிரந்தரமான கறையை உருவாக்குகிறது.

இது ஏன் சோப்பு போட்டு கழுவினாலும் போவதில்லை தெரியுமா? ஏனென்றால் இது தோலின் மேல்புறத்தில் ஒட்டிக்கொள்வது கிடையாது.. மாறாக தோலின் செல்களுக்குள்ளேயே ஊடுருவி ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறது. அதனால்தான் சோப்பு மட்டுமல்ல, பெட்ரோல் அல்லது எந்த விதமான திரவங்களை கொண்டு தேய்த்தாலும் இந்த கறை நீங்காது.

தோலின் செல்கள் இயற்கையாகவே உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும் வரை அப்படியே இருக்கும்.. இப்படி தோலின் செல்கள் உதிர்வதற்கு குறைந்தது சுமார் 2 முதல் 4 வாரங்கள் வரை ஆகும்.. அதுவரை இந்த கறையின் அடையாளம் மறையாது... தோல் இயல்பாக புதிதாக உருவாகும்போது தான் அந்த கறை மெல்ல மெல்ல மறைய துவங்கும்.

மை ஸ்பெஷாலிட்டி

நம்முடைய இந்தியாவில் தேர்தல் முறைகேடுகளைத் தவிர்க்கவும், கள்ள வாக்குகளைத் தடுக்கவும் ஒரு வழிமுறை தேவைப்பட்டது... இதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு தீர்வை தேடியபோது, (National Physical Laboratory of India அதாவது தேசிய இயற்பியல் ஆய்வகம் இந்த மையை உருவாக்கியது.

முதன்முதலில் 1962ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில்தான் இந்த மை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை, இந்தியாவின் ஜனநாயக பயணத்தில் இந்த மை பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. இந்த மை செய்யும் வேலையையும், வெற்றியையும் பார்த்து, இன்று கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா என உலகின் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிலிருந்து இந்த மையை இறக்குமதி செய்து தங்கள் நாட்டுத் தேர்தல்களுக்குப் பயன்படுத்துகின்றன.


மை உற்பத்தியின் பின்னணி

அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மையை தயார் செய்வது மிகப்பெரிய பிராசஸ் ஆகும்..இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு தேவையான இந்த மையைத் தயாரிக்கும் பிரத்யேக உரிமையை மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் (Mysore Paints and Varnish Ltd) பெற்றுள்ளது. இது கர்நாடக அரசுக்கு சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.. பல வருடங்களாகவே இந்திய தேர்தல்களுக்கு தேவையான இந்த சிறப்பு மை இவர்கள் தான் வழங்கி வருகிறார்கள்.

தேர்தல் காலங்களில் கோடிக்கணக்கான பாட்டில்கள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதன் ரசாயனக் கலவை, மிக மிக சீக்ரெட்டாகவே பாதுகாக்கப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் ஏன் இது முக்கியமானது?

வாக்காளர் அடையாள அட்டை முதல் டிஜிட்டல் முறைகள் வரை பல பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், வாக்குச் சாவடியில் இருக்கும் ஒரு அதிகாரிக்கு, ஒரு நபர் ஏற்கனவே வாக்களித்துவிட்டாரா இல்லையா என்பதை கண்டறிய விரலில் இருக்கும் இந்த அடையாளமே மிக எளிமையான மற்றும் நம்பகமான வழி என்றே சொல்லலாம்.. இது தேர்தல் முறைகேடுகளைத் தடுத்து, "ஒருவருக்கு ஒரு வாக்கு" என்ற ஜனநாயக விதியை உறுதி செய்கிறது...

இந்த சாதாரணமாக தோன்றும் ஊதா நிற மை, ஜனநாயகத்தின் நேர்மையை பாதுகாக்கும் ஒரு முக்கிய அறிவியல் கருவியாக உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது..

அந்தவகையில், வாக்குச்சாவடியிலிருந்து வெளியே வரும்போது நம்முடைய விரலில் மின்னும் அந்த நீல நிறக் கறை, நாம் ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்பதற்கான சான்று மட்டுமே கிடையாது, அது இந்திய அறிவியலின் ஒரு மகத்தான வெற்றியும் கூட...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+