மேல்நிலைப்பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் பாடப்பிரிவு நீக்கம்: அதிரடி அறிவிப்பு
சென்னை: அரசு பள்ளிகளில் மேல்நிலைப்பிரிவில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு, அதில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்யுமாறு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில், மேல்நிலை வகுப்புகளில் 1:40 என்ற ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டும். மேலும், மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி அல்லது மாநகராட்சி பகுதியாக இருந்தால், குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஊரக பகுதியாக இருப்பின், குறைந்தபட்சமாக 15 மாணவர்கள் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேல்நிலைப் பிரிவில் 60 மாணவர்கள் வரை ஒரு பிரிவாகவும், 60 இருந்து 100 மாணவர்கள் வரை ஒரு பிரிவாகவும், ஒவ்வொரு கூடுதல் 40 மாணவர்களுக்கு, கூடுதல் பிரிவும் ஏற்படுத்திடவும் அனுமதிக்கப்படுகிறது. குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு, அதில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்யும்போது, ஒரு ஆசிரியருக்கு வாரத்திற்கு 28 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்று கண்காணிக்கவும், அவ்வாறு போதிய பாடவேளையின்றி உள்ள முதுகலை ஆசிரியரை உரிய முறையில், அதற்கு கீழ்நிலை வகுப்புகளான 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்க பாடவேளைகளை ஒதுக்கீடு செய்யவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யும்போது, ஒருகுறிப்பிட்ட பாடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து, அதில் ஒரு பணியிடம் உபரி பணியிடமாக இருந்தால், அப்பாடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களில் இளையோரை ஆசிரியருடன் உபரியாக காண்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான புள்ளி விவரங்களை அந்தந்த பள்ளிகள் தயார் செய்து, அதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக, பள்ளிக்கல்வி ஆணையரகத்திற்கு வரும் 26-ம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
வெறும் 1 மணி நேரம்.. ஒட்டுமொத்த சிபிஎஸ்இ சிஸ்டமும் ஹேக்.. அம்பலப்படுத்திய 19 வயது இளைஞர் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
சிதைந்துபோன மாணவர்கள் நம்பிக்கை.. CBSE விவகாரத்தில் குளறுபடிகள் என்ன? அதிர வைக்கும் ரிப்போர்ட் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications