சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரிய குட்நியூஸ்! அமெரிக்காவில் கேன்சர் மருந்து சோதனை வெற்றி! 100% குணம் தரும் மருந்து கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: அமெரிக்காவில் கேன்சருக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து ஒன்று சோதனையில் கேன்சர் நோயாளிகளை குணப்படுத்தி உள்ளது. சோதனையில் கலந்து கொண்ட எல்லா கேன்சர் நோயாளிகளும் இந்த மருந்து எடுத்துக்கொண்ட பின் குணமடைந்த சம்பவம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

வருடங்கள் ஓடினாலும்.. பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்னும் மாறாத.. குணப்படுத்த முடியாத விஷயம் என்றால் அது கேன்சர்தான்! பல ஆய்வுகள், ஆராய்ச்சிகளுக்கு பின்பும் கேன்சருக்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.

சில மருந்துகள் கேன்சருக்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும்.. முழுமையாக கேன்சரை குணப்படுத்தாமல் இருந்தது. இப்போது வரை கீமோதெரபிதான் கேன்சருக்கு எதிராக முக்கியமான சிகிச்சை முறையாக இருக்கிறது.

Recommended Video

    Cancer Cure Medicine கண்டுபிடிப்பு! History-யில் இடம்பிடித்த Dostarlimab | *Science | OneIndia Tamil

    புற்றுநோய் பாதித்த 15 வயது சிறுவன்.. நரக வேதனை.. தந்தையே விஷ ஊசி போட்டு கொன்றார்?.. அதிர்ச்சி தகவல்!புற்றுநோய் பாதித்த 15 வயது சிறுவன்.. நரக வேதனை.. தந்தையே விஷ ஊசி போட்டு கொன்றார்?.. அதிர்ச்சி தகவல்!

    என்ன மருந்து

    என்ன மருந்து

    இந்த நிலையில்தான் அமெரிக்காவில் கேன்சருக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து ஒன்று சோதனையில் கேன்சர் நோயாளிகளை குணப்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள Memorial Sloan Kettering Cancer Center மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது,. இந்த மருந்து வைத்து சோதனை செய்யப்பட்ட எல்லோரும் 100 சதவிகிதம் கேன்சரில் இருந்து முற்றிலும் குணம் அடைந்து உள்ளனர்.

    கேன்சர்

    கேன்சர்

    மிக சிறிய அளவில்தான் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு கீமோதெரபி மருத்துவ சிகிச்சைகளை வழங்காமல், எளிதாக dostarlimab என்ற மருந்து கொடுத்தே நோயாளிகளை குணமடைய செய்துள்ளனர். மொத்தம் 18 குடல் புற்றுநோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து கொடுத்தபின் அவர்கள் முற்றிலும் அந்த நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர். எம்ஆர்ஐ, பிஇடி எனப்படும் positron emission tomography என்று அனைத்து சோதனையிலும் கேன்சர் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சிகிச்சை எப்படி?

    சிகிச்சை எப்படி?

    இந்த நோயாளிகள் சிலர் ஏற்கனவே வேறு விதமான சிகிச்சைகளை பெற்று, அதன் காரணமாக குணப்படுத்த முடியாத நிலையை அடைந்து, அதன்பின் இந்த டோஸ்டர்லிமாப் என்று மருந்து கொடுக்கப்பட்டு அவர்கள் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக அவர்களின் உடலில் எந்த விதமான ஆப்ரேஷனும் செய்யப்படவில்லை. உடலில் எங்கும் கத்தி வைக்கப்படவில்லை. பொதுவாக கேன்சர் நோய் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெரும் நபர்களுக்கு, சிகிச்சைக்கு பின் பக்க விளைவுகள் இருக்கும்.

    பக்க விளைவு

    பக்க விளைவு

    ஆனால் இவர்களுக்கு அந்த மாதிரியான பக்க விளைவுகள் எதுவும் இல்லை. அதேபோல் சிகிச்சை அளிக்கப்பட்டு 25 மாதங்கள் கழிந்தும் அவர்களுக்கு மீண்டும் கேன்சர் செல்கள் எதுவும் தோன்றவில்லை என்று dostarlimab மருந்தை ஸ்பான்சர் செய்த GlaxoSmithKline நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு கட்டுரையை எழுதி உள்ள Memorial Sloan Kettering Cancer Center மருத்துவர் ஆண்ட்ரியா செரிக், இந்த மருந்து சிறப்பாக செயல்படுகிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.

    எப்படி மருந்து செயல்படும்?

    எப்படி மருந்து செயல்படும்?

    இந்த dostarlimab மருந்து உடலில் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை செலுத்தப்படும். மொத்தம் 6 மாதங்கள் மருந்து செலுத்தப்படும். உடலில் இருக்கும் கேன்சர் செல்களை அடையாளப்படுத்த இது உதவும். கேன்சர் செல்கள் பொதுவாக உடலின் எதிர்ப்பு சக்தியில் இருந்து எஸ்கேப் ஆக மாஸ்க் போன்ற ஒரு படலத்தை கொண்டு மறைந்து இருக்கும். இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள் கேன்சர் செல்களை கண்டறிய முடியாது. ஆனால் இந்த மருந்து அந்த மாஸ்க்கை நீக்குவதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள், சுயமாக கேன்சர் செல்களை அழிக்க வழி செய்கிறது.

    இயற்கையான சிகிச்சை

    இயற்கையான சிகிச்சை

    இதனால் இயற்கையாக கேன்சர் செல்கள் அழிகின்றன. பொதுவாக இது போன்ற சிகிச்சைகள் பக்க விளைவை ஏற்படுத்தும். ஆனால் dostarlimab சிகிச்சை முறை அப்படி பக்க விளைவு எதையும் ஏற்படுத்தவில்லை. இதுதான் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. மோசமான நிலையை அடைந்தவர்களை கூட இந்த மருந்து குணமாக்கி உள்ளது. இந்திய மதிப்பில் இதன் சிகிச்சைக்கு இப்போதே 9 லட்சம் வரை ஆகலாம் என்கிறார்கள்.

    மார்க்கெட் மருந்து

    மார்க்கெட் மருந்து

    மார்கெட்டிற்கு வரும் போது இதை விட கூடுதலாக இருக்கும். அதே சமயம் இந்த மருந்தை மற்ற மருத்துவர்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மற்றவர்கள் பொதுவாக இதை ஆராய்ச்சி செய்து உறுதி செய்ய வேண்டும். அதன்பின்பே இந்த மருந்து மார்கெட்டிற்கு வரும். அதற்கு சில மாதங்கள், வருடங்கள் ஆகலாம். அதேபோல் இந்த மருந்து எத்தனை காலத்தில் நோயாளிகளை குணமாக்கும் என்பதிலும் சில சந்தேகம் உள்ளதால் அதை பற்றி கூடுதல் ஆய்வுகளும் விரைவில் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Cancer in all patients literally vanished in US medicine trial for the first time. அமெரிக்காவில் கேன்சருக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து ஒன்று சோதனையில் கேன்சர் நோயாளிகளை குணப்படுத்தி உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X