சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது.. திமுகவில் "ஜாதி - மதம்" இல்லையா.. யார் சொன்னது.. 16 சீட் கொடுத்திருக்காங்க பாருங்க!

வேட்பாளர்கள் லிஸ்ட்டில் சாதீய ஓட்டுக்களை அள்ள திமுகவின் பிளான்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சாதி, மத ஓட்டுக்களை குறி வைத்தே திமுக இந்த முறை கூட்டணியை நிர்ணயித்ததாக கூறப்படுகிறது.. அந்த வகையில், இன்று ஸ்டாலின் அறிவிக்க போகும் வேட்பாளர் லிஸ்ட் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

ஒருமுறை சீமான் பேசும்போது சொன்ன வார்த்தைகளை இங்கு நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.. "என்னைக்காவது கருணாநிதியும், ஜெயலலிதா அம்மையாரும், இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு போய் நீங்கள் பார்த்திருக்கீங்களா? அவங்க போக மாட்டாங்க..

சாதியை வாக்கை குறி வெச்சு பாயுற இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. முத்துராமலிங்கருக்கு வணக்கம் செலுத்த போறாங்க. அதோடு நம்ம வாக்கு வங்கி சரியாயிடுச்சுன்னு நினைச்சுக்கிறாங்க.

 மருதுபாண்டி

மருதுபாண்டி

அதே கூட்டம் எங்க அப்பத்தா வேலுநாச்சியாருக்கு மரியாதை செலுத்துவதில்லை? எங்க பாட்டன் மருதுபாண்டியனுக்கு செலுத்துறது இல்லை? ஏன்னா இங்கேயே ஓட்டு கவர் ஆயிடுச்சு... முத்துராமலிங்க தேவர் நினைவிடத்துக்கு வர்றவங்க, பூலித்தேவன் நினைவிடத்துக்கு போறது இல்லை. ஏன்னா, தேவர் ஓட்டு கவர் ஆயிடுச்சு... இம்மானுவேல் சேகர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த போனால், தேவர்கள் எல்லாம் ஓட்டு போட மாட்டாங்க... கோச்சுப்பாங்க.. தேவர் சாதியினர் ஓட்டு கிடைக்காதுன்னு நினைக்கிறாங்க. அதனால அங்க போறது இல்லை" என்று ஒருமுறை பேசியிருந்தார்.

 நியாயம்

நியாயம்

இது எத்துணை சத்தியமான வார்த்தைகள்.. சீமானின் இந்த பேச்சில் உள்ள நியாயத்தை நாம் மறுப்பதற்கில்லை.. ஆயிரம் கொள்கை, கோட்டுபாடுகள், தனித்துவத்தை திராவிட கட்சிகள் பெற்றிருந்தாலும் சரி, உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம், நலத்திட்டங்கள் போன்றவற்றில் சிறந்து விளங்கியிருந்தாலும்சரி, இங்கு அனைத்தையும் தீர்மானிப்பது "சாதி"தான்.. சாதி அரசியலே முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொரு தேர்தலிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.. அது திமுகவிலும் சரி, அதிமுகவிலும் சரி... இரண்டு கட்சியிலுமே இது இப்போது வரை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

விசிக

விசிக

உதாரணத்துக்கு, பாமக அதிமுக கூட்டணியில் இருந்தால், விசிக திமுகவில் இருக்கும்.. விசிகி திமுக கூட்டணியில் இருந்தால் பாமக அதிமுகவில் இருக்கும்.. இதுதான் நடைமுறை.. இதில் இன்னொன்றையும் அழுத்தமாக சொல்ல வேண்டி உள்ளது.. எந்த காலத்திலும் விசிகவும், பாமகவையும் இரு திராவிட கட்சிகளும் ஒன்று சேரவே விடாது.. அப்படி ஒன்றிணைத்துவிட்டால், அவர்களின் அரசியல் காணாமல் போய்விடும் அபாயமும் இங்கு உள்ளது.

லிஸ்ட்

லிஸ்ட்

இதே நடைமுறை இந்த தேர்தலிலும் எதிரொலித்து வருகிறது.. திமுகவில் வேட்பாளர் லிஸ்ட் ஒருவழியாக இன்று வரஇருக்கிறது.. தமிழகத்தை கால் நூற்றாண்டு காலம் களம் கண்ட கட்சிகளான விசிக, மதிமுக போன்றவை தனித்து நின்று தேர்தலை சந்திக்கும் துணிச்சலை இப்போது வரை பெறவில்லை என்பது வேதனையே.. இது கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கும் பொருந்தும் உண்மை. கிட்டத்தட்ட 3 மாத காலம் திமுகவிடம் கெஞ்சி கொண்டும், பேச்சுவார்த்தையை மறைமுகமாக நடத்தியும் இப்போதுதான் ஒரு முடிவுக்கு கூட்டணி வந்துள்ளது. அந்த வகையில், திமுக கூட்டணியில் ஜாதி, மதத்துக்கு எத்தனை சீட் கிடைத்துள்ளது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டி உள்ளது..

திராவிடம்

திமுக - 174
மதிமுக- 6

தமிழ் தேசியம்

தமிழக வாழ்வுரிமை கட்சி- 1

தேசியம்

காங்கிரஸ் - 25

கம்யூனிசம்

இந்திய கம்யூனிஸ்ட்- 6
மார்க்சிஸ்ட் - 6

மதம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 3
மனிதநேய மக்கள் கட்சி- 2

ஜாதி

விடுதலை சிறுத்தைகள்- 6
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 3
ஆதித் தமிழர் பேரவை- 1
மக்கள் விடுதலை கட்சி- 1

வியூகம்

வியூகம்

இதுதான் திமுகவின் கணக்கு... இப்படித்தான் தொகுதிகளை பிரித்து பார்த்து ஒதுக்கி உள்ளது.. இவ்வளவு கூட்டணி கட்சிகள் இதுவரை திமுகவில் கிடையாது.. ஆனால், அளவுக்கு அதிகமான கட்சிகளை சேர்த்து கொண்டு, அதேசமயம், அளவுக்கு குறைவான தொகுதிகளை அவைகளுக்கு ஒதுக்கிவிட்டு, மொத்த லாபத்தை அள்ள வியூகம் வகுத்துள்ளது திமுக.

வன்னியர்

வன்னியர்

இதே விஷயத்தை வேறு மாதிரியும் நாம் அணுகலாம்.. வன்னியர் வாக்குகளை ஓரளவு திமுக இயல்பாகவே பெற்றிருக்கிறது.. துரைமுருகன், ஜெகத் ரெட்சகன் போன்ற பெரும் தலைகள் இருந்தாலும் வேல்முருகனை சரிகட்டி கூட்டணியில் வைக்க வேண்டி உள்ளது.. 10 வருடத்துக்கு முன்பு பேசிய பேச்சினால், கொங்கு மண்டலத்தில் இன்னமும் திருமாவளவன் மீது கோபம் குறையவில்லை என்றாலும் திருமாவுக்கு 6 சீட் தர வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது.

முஸ்லிம்கள்

முஸ்லிம்கள்

ஆதி தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி போன்றவைகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது என்று எடுத்து கொண்டாலும், அந்த சாதி மக்களின் ஓட்டுக்களையும் வாரி சுருட்ட திமுக கணக்கு போட்டுள்ளது... வழக்கமாக முஸ்லிம் ஓட்டுக்கள் திமுகவுக்கே அதிகமாக விழக்கூடும் என்பதால்தான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சியையும் ஆதரித்து கூட்டணிக்குள் அனுமதித்துள்ளது.

 மத அரசியல்

மத அரசியல்

இந்த தேர்தலில் 170 சீட்களில் திமுக தனித்து களம் கண்டாலும், சாதி, மற்றும் மத ஓட்டுக்களை குறி வைத்தே, அத்தகைய கட்சிகளை திமுக, கூட்டணிக்குள் இணைத்து சரிக்கட்டி உள்ளதாகவே இது பார்க்கப்படுகிறது.. அதாவது, திராவிட மண், பெரியார் கடவுள் என்று சொல்லி கொண்டே சாதி ரீதியாக தமிழரை பிரித்து அரசியல் செய்யும் போக்கினை திராவிட கட்சிகள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதற்கு இது ஒரு இன்னொரு உதாரணம்.

English summary
Candidate List and DMK gives importance to caste vote
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X