Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்பான பயணிகளே! விமானத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடிய கேப்டன்! பயணிகளுக்கு தந்த இன்ப அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற தனியார் விமானத்தில் கேப்டன் பிரிய விக்னேஷ் தமிழ் மொழியில் தமிழ் மாதங்கள் தொடர்பான கவிதை கூறி பயணிகளுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறினார். இந்த கவிதை மூலம் ஒவ்வொரு தமிழ் மாதத்தையும் குறிப்பிட்டு அதன் பாரம்பரியத்தை அவர் நினைவுப்படுத்தி உள்ளார்.

விமானங்களில் ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் விமான நிறுவனத்தில் கேப்டனாக பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த பிரிய விக்னேஷ் விமான பயணத்தின்போது தமிழில் அறிவிப்பு செய்ய துவங்கி அதை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.

இவர் பணியில் இருக்கும்போது எப்போதும் விமான பயணிகளுக்கு தமிழிலேயே அறிவிப்புகள் வழங்கி வருகிறார். வானில் பறந்தபடி இவரது அறிவிப்பை இன்ப தமிழில் கேட்க தனி ரசிகர்கள் கூட்டமும், பயணிகளும் உள்ளனர்.

விமானத்தில் தமிழ் புத்தாண்டு

விமானத்தில் தமிழ் புத்தாண்டு

இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று கேப்டன் பிரிய விக்னேஷ் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பணியில் இருந்தார். தமிழ் புத்தாண்டையொட்டி அவர் கவிதை ஒன்றை பயணிகளிடம் வாசித்து காண்பித்தார். மேலும், அழகு தமிழில் புத்தாண்டு வாழ்த்தை மனதார கூறினார். அப்போது அவர் தனது பாட்டியின் நினைவுகளையும், நம் பாரம்பரியத்தோடு இணைத்து அவர் சொல்லி கொடுத்த தமிழ் மாதங்களையும் கவிதை நடையில் கூறினார்.

புராதன பாட்டி... தமிழ் மாத அறிமுகம்

புராதன பாட்டி... தமிழ் மாத அறிமுகம்

இதுகுறித்து பிரிய விக்னேஷ் கூறியதாவது: ‛‛அன்பான பயணிகளே... அனைவருக்கும் வணக்கம்... இன்று ஒரு சிறப்பான நாள்... இன்று தமிழ் புத்தாண்டு... இந்த இனிமையான நாளில் நான் இயற்றிய தமிழ் கவிதையை உங்களுக்காக வாசித்து காட்ட விரும்புகிறேன்... தமிழும் அவளும் ஒரே. எங்கள் வீட்டில் புராதனமாய் எனது பாட்டி.. கால் இரண்டையும் நீட்டி... இப்படித்தான் அறிமுகப்படுத்தினாள் தமிழ் மாதங்களை எனக்கு...

மாதங்கள் வரிசையாக..

மாதங்கள் வரிசையாக..

சித்திரையில் சிங்காரிச்சி வைகை ஆற்றில் வராரு அழகர் அய்யா... வைகாசியில் தான் அக்னி வெயில்... ஆனியில் தானே நீபிறந்த... ஆடியில் புதுஜோடியை பிரிச்சி தானே ஆகணும்... ஆவணியில் எங்கள் அப்பா, ஆத்தா கல்யாண நாள்... புரட்டாசி பெருமாளுக்கு... ஐப்பசியில் அடைமழை... கார்த்திகையில் மலை தீபம்... மார்கழியும் மச்சும் குளிரும்... தையில் தரையும் குளிரும்... மாசிபச்ச மாசியில குடும்பத்தோடு போயாகணும் குலசாமிய கும்பிடுறதுக்கு... பங்குனியில் உத்திர திருவிழா, உனக்கும் பெரிய பரீட்சை... பதனிசா படிச்சுக்கய்யா...

தமிழ் புத்தாண்டு வாழ்த்து

இப்படியாக அமுதும், தமிழும்போல அமையட்டுமே தமிழ் புத்தாண்டு... அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் என பிரிய விக்னேஷ் கூறி முடிக்க, சூப்பர் என பயணிகள் பாராட்டி எழுப்பிய கரவொலி விண்ணையும் பிளந்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ பார்க்கும் மக்கள் பிரிய விக்னேசுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய பாஸ்கர் பாராட்டு

விஜய பாஸ்கர் பாராட்டு

இந்த வீடியோவை பார்த்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய அதிமுக எம்எல்ஏவுமான விஜய பாஸ்கர், பிரிய விக்னேசை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛ நேற்று சென்னையில் இருந்து தூத்துக்கடி சென்ற விமானத்தில் அதன் துணை விமானி பிரிய விக்னேஷ் தமிழ் புத்தாண்டு என்பதால் நம் மண்ணையும், மக்களையும் பிரதிபலிக்கும் வகையில் அழகான தமிழ் கவிதை ஒன்றை பகரிர்ந்திருக்கிறார். நெகிழ செய்கிறது. நண்பருக்கு என் வாழ்த்தும், அன்பும்'' என பாராட்டியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+