சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை நியாபகம் இருக்கா?.. ரோஹித்திடம் டிராவிட் பஸ்ஸில் பேசியது என்ன?.. வைரலாகும் பேட்டி!

Google Oneindia Tamil News

சென்னை: கேப்டன் ரோஹித் சர்மா, கோச் டிராவிட் இருவரும் முதல் முதலில் சந்தித்துக்கொண்ட தருணம் குறித்த விவரங்களை நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

Recommended Video

    Team India sets well under Rohit - Dravid combo | IND vs NZ | OneIndia Tamil

    2021 உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்த இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக டி 20 தொடரில் ஆட தயாராகி வருகிறது. ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

    மொத்தம் 400 காமுகர்கள்.. 16 வயது சிறுமி 6 மாதங்களாக பலாத்காரம்.. உறைய வைக்கும் சம்பவம்! மொத்தம் 400 காமுகர்கள்.. 16 வயது சிறுமி 6 மாதங்களாக பலாத்காரம்.. உறைய வைக்கும் சம்பவம்!

    கோலி கேப்டன்சியில் இருந்து பதவி விலகிய நிலையில் ரோஹித் சர்மா டி 20 தொடர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று தொடங்க உள்ள டி 20 தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இளம் இந்திய டி 20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

    பயிற்சி

    பயிற்சி

    இந்த நிலையில் நேற்று முதல்நாள் பயிற்சி முடித்துவிட்டு வீரர்கள் எல்லோரும் பஸ்ஸில் அறைக்கு திரும்பி உள்ளனர். அப்போது டிராவிட் - ரோஹித் அருகருகே அமர்ந்து இருந்தனர். அப்போதுதான் இருவரும் 2007ல் நடந்த அயர்லாந்து கிரிக்கெட் தொடர் குறித்து பேசி உள்ளனர். 2007ல்தான் ரோஹித் சர்மா ராகுல் டிராவிட் கேப்டன்சிக்கு கீழ் அறிமுகம் ஆனார். அயர்லாந்து தொடரில் ரோஹித் அறிமுகம் ஆனார்.

    ரோஹித் சர்மா

    ரோஹித் சர்மா

    இதைப்பற்றி பேசிய ரோஹித் சர்மாவிடம்.. ராகுல் டிராவிட் சென்னையில் நடந்த போட்டியை நினைவு கூர்ந்து உரையாடி இருக்கிறார். அதாவது அயர்லாந்து போட்டிக்கு முன்பாகவே உங்களை பார்த்து இருக்கிறேன்.. சென்னையில் நடந்த சேலஞ்சர் போட்டி ஒன்றில் உங்களை நான் பார்த்து இருக்கிறேன் என்று ரோஹித் சர்மாவிடம் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    உரையாடல்

    உரையாடல்

    பஸ்ஸில் நடந்த இந்த உரையாடல் குறித்து நேற்று முதல்நாள் ரோஹித்தும், ராகுல் டிராவிட்டும் நேற்று செய்தியாளர் சந்திப்பில் மனந்திறந்து பேசினார்கள். ராகுல் டிராவிட் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, நாங்கள் நேற்று பஸ்ஸில் இதை பற்றி உரையாடினோம். ரோஹித் அயர்லாந்து தொடரில் அறிமுகம் ஆனார். ஆனால் அதற்கு முன்பே சென்னையில் நாங்கள் சந்தித்து இருக்கிறோம்.

    சென்னை

    சென்னை

    அவரை நான் சென்னையில் பார்த்தேன். ஆனால் பேசவில்லை. ரோஹித் பெரிய வீரராக வருவார் என்று அப்போதே எனக்கு தெரியும். அவர் ஸ்பெஷல் வீரர் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தது. அவரிடம் ஒரு ஸ்பெஷல் ஆட்டம் இருந்தது. எனவே பல வருடங்கள் கழித்து இப்போது அவர் பெரிய வீரராக உருவெடுத்துள்ளார்.

    லீடர்

    லீடர்

    14 வருடத்தில் லீடராக உருவெடுத்துள்ளார். அவர் இந்திய வீரராகவும், மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகவும் நிறைய சாதனைகளை செய்துள்ளார். இத்தனை சாதனைகளையும் ரோஹித் சர்மா மிக எளிதாக செய்துள்ளார். அதற்காகவே ரோஹித் சர்மாவை பாராட்ட வேண்டும் என்று ராகுல் டிராவிட் குறிப்பிட்டுள்ளார். இதே சம்பவத்தை ரோஹித் சர்மாவும் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

    ரோஹித் சர்மா

    ரோஹித் சர்மா

    ரோஹித் சர்மா பேசியதாவது, நான் அயர்லாந்து தொடரில் டிராவிட்டிற்கு கீழ் களமிறங்கினேன். ஆனால் நான் முதல் முறை டிராவிட்டிடம் அதற்கு முன்பே பெங்களூர் கேம்பில் உரையாடிவிட்டேன். அவரிடம் முதலில் பேசிய போது எனக்கு மிகவும் அச்சமாக இருந்தது. நான் அப்போது சீனியர் இல்லை. இதனால் சீனியரிடம் பேச அச்சம் இருந்தது.

    சந்திப்பு

    சந்திப்பு

    ஆனால் டிராவிட் மறுநாள் என்னிடம் வந்து பேசினார். நீ அடுத்த போட்டியில் ஆடுவாய் என்று கூறினார். எனக்கு அதை கேட்கவே சந்தோசமாக இருந்தது. அந்த தருணம் இப்போதும் என் நினைவில் இருக்கிறது. டிரெஸ்ஸிங் ரூமில் டிராவிட் என்னிடம் இப்படி கூறியதை மறக்கவே மாட்டேன், என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

    ரோஹித் சர்மா

    ரோஹித் சர்மா

    நேற்று கேப்டன் ரோஹித் சர்மா, கோச் டிராவிட் இருவரும் இப்படி மாறி மாறி பேசியது அழகாக இருந்தது. இரண்டு பேருக்கும் இடையில் இவ்வளவு வேகமாக கெமிஸ்ட்ரி ஏற்பட்டது பெரிய அளவில் இந்திய ரசிகர்களை கவர்ந்துள்ளது. கேப்டனும், கோச்சும் நெருக்கமாக நட்பாக இருப்பது இந்திய அணிக்கு நல்லது என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    English summary
    Indian Captain Rohit Sharma and Coach Rahul Dravid reveals their first meeting in press meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X