தமிழ் மொழியால் இணைந்தவர்களை சாதி-மதத்தால் பிரிக்கவே முடியாது.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி உரை
சென்னை: தமிழ் மொழியல்ல அது உயிர். மொழியால் இணைந்தவர்களை சாதி மதத்தால் பிரிக்கவே முடியாது என தமிழ் பரப்புரை கழகம் துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்.
உலகில் ஏறத்தாழ 90 நாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் இளந்தலைமுறையினருக்கும் தமிழ்மொழியைக் கற்பிக்கவும், பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு செல்லவும் பல முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக தான் தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும் என அரசு ஆணை வெளியிட்டது. அதன்பிறகு அதனை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

துவக்க விழா
முதற்கட்டமாக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழை எளிமையாகக் கற்பதற்கான தமிழ்ப் பாடநூல்கள், வெளிநாடுகள் வெளி மாநிலங்களில் தமிழை கற்பிக்கும் அமைப்புகளுக்கு மற்றும் வெளி நிதியுதவி வழங்குதல், தமிழை திறம்பட கற்பிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தமிழ் பரப்புரை கழகத்தை துவக்கி விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று தமிழ் பரப்புரை கழகத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழே என அழைப்பதில் சுகம்
தமிழ் வெறும் மொழியல்ல, அது நம்முடைய உயிர். தமிழை, தமிழே என அழைப்பதில் உள்ள சுகம் வேறு எதிலும் இருக்காது. தமிழ் வாழும் காலம் எல்லாம் தமிழ் பரப்புரை கழகத்தை துவக்கி வைப்பதை வாழ்நாள் பெருமையாக கருதுகிறனே். வீழ்வது நாமாக இருப்பதாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பது தான் திமுகவின் முழக்கம். தமிழை வளர்க்க தனி அக்கறையுடன் செயல்பட்டு வரும் அனைவருக்கும் அரசு சார்பில் இதயப்பூர்வமான நன்றி.

24 மொழிகளில் தமிழ் பாடநூல்
இதற்கு மகுடம் வைப்பது போல் தமிழ் பரப்புரை கழகம் துவங்கப்பட்டுள்ளது. 30 நாடுகளில் அதிகமாகவும், 60 நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும தமிழர்கள் வாழ்கிறார்கள். சில நாடுகளில் எழுதவும், படிக்கவும் மறந்த தமிழர்கள் உள்ளனர். இவர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கத்தான தமிழ் பரப்புரை கழகம் துவங்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக 24 மொழிகளில் தமிழ் பாடநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சாதி, மதத்தால் பிரிக்க முடியாது
30 நாடுகள், 20 மாநிலங்களை சேர்ந்த தமிழ் அமைப்பின் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைய வழியில் பங்கேற்றுள்ளனர். உணர்வால், உள்ளத்தால் தமிழால் நாம் அனைவரும் இணைந்துள்ளோம். அமெரிக்கா, குவைத், நார்வே உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் இணைந்துள்ளனர். மொழியால் இணைந்தவர்களை சாதி, மதத்தால் பிரிக்க முடியாது. தமிழால் ஒன்றிணைய வேண்டிய காலக்கட்டத்தில் தமிழ் பரப்புரை கழகம் துவங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தமிழ்
இதற்கு முன்பு தமிழ் பாதுகாப்பு கழகம் துவங்கப்பட்டது. அப்போது தமிழை பாதுகாக்க வேண்டிய காலக்கட்டமாக இருந்தது. தற்போது தமிழை பரப்ப வேண்டிய காலம். இதனால் தான் தமிழ் பரப்புரை கழகம் துவங்கப்பட்டுள்ளது. தாய்மொழியாம் தமிழ்மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் இதன் உயரிய நோக்கம்'' என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications