பெங்களூர் மக்கள் குடிநீர் தேவைக்காக.. தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு.. சட்டசபையில் எடப்பாடி பேச்சு
சென்னை: காவிரி ஆறு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் என மேகதாது அணைக்கு எதிரான தனித் தீர்மானத்தின்போது தெரிவித்துள்ளார் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.
மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. சமீபத்தில் கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையின் போது சட்டசபையில் பேசிய அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட நிதி நிலை அறிக்கையில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தார்.
இதையடுத்து, கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வந்தது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

எடப்பாடி பழனிச்சாமி
மேகதாது தனித் தீர்மானத்தின் போது, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ''காவிரி நதிநீர் தமிழகத்தின் நீர் தேவைக்கான முக்கிய பங்காற்றுகிறது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 20 மாவட்டங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. 1987 எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், நடுவர் மன்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது. இந்தப் பிரச்சனையில் காவிரி விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசும் தன்னை இந்த வழக்கில் இணைத்துக் கொண்டது.

காவிரி
காவிரியில் இருந்து 205 டி.எம்.சி நதி நீர் கிடைக்க வேண்டும் என காவிரி நதி நீர் ஆணையம் இடைக்கால தீர்ப்பை வழங்கியது. 1991ல் அதிமுக ஆட்சியில் இந்த தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகும் இந்த தீர்ப்பு நடைமுறைக்கு வராததால், 1992ம் ஆண்டு அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது. அதைத்தொடர்ந்து 1998ம் ஆண்டு காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றை மத்திய அரசு ஏற்படுத்தியது.

நடுவர் மன்றம்
காவிரி நடுவர் மன்றம் 2007ல் தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. அதை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என அதிமுக அரசு போராடியது. இதையடுத்து அப்போதைய அதிமுக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை வெளியிட வேண்டும் என தீர்ப்பளித்தது. இதையடுத்து, 2013ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

அணைகள்
காவிரி படுகை ஒரு பற்றாக்குறை படுகையாகும். காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைப்படி, நீர்த்தேக்கங்களில் நீரை தேக்கி வைக்கவும், நீரை வெளியிடவும், தற்போதுள்ள அணைகளே போதுமானது என காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ஒரு கொள்கையையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் முன்னரே, கீழ் பாசனத்தில் உள்ள மாநிலத்தோடு பரீசிலிக்க வேண்டும்.

மத்திய அரசிதழ்
காவிரி நடுவன் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டும்,
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைப்புகளை மத்திய ஆரசு அமைக்கவில்லை. ஆகையால், இந்த குழுவை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை 2013ல் அப்போதைய அதிமுக அரசு தாக்கல் செய்தது.

தமிழக அரசு
தமிழக அரசிடம் நீர் திட்டங்கள் குறித்து எதுவும் அறிவிக்காமல், குடிநீர் திட்டம் என்ற பெயரில் மேகதாது எனும் இடத்தில் புதிதாக இரண்டு அணை கட்ட தொழில்நுட்ப ஆய்வுக்கான அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டும் எனவும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே எந்த அணையும் அமைக்கப்படாமலும், பாதுகாப்புக் குழு அமைக்கவும், உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் தீர்ப்புகள் வரும் வரை, இந்த நடைமுறையே தொடர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அதற்கு உச்சநீதிமன்றமும் உறுதியளித்தது. இதையடுத்து தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதை இந்தியப் பிரதமருக்கும் அனுப்பப்பட்டது.

மத்திய அரசு
மத்திய அரசிடம், மேகதாது திட்டத்தைக் கர்நாடக அரசு செயல்படுத்தக்கூடாது என பிரதமரை சந்தித்து அப்போதைய தமிழக அரசு கோரிக்கை வைத்தது.
இதை கர்நாடக அரசு மீறும் பட்சத்தில், அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தெரிவிக்கப்பட்டது. 2018ல் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் கர்நாடகாவின் வாதம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து கீழ்படுகை மாநிலத்தின் ஒப்புகை இல்லாமல் மேல் படுகை மாநிலம் எந்த கட்டுமானத்தையும் கொண்டுவரக்கூடாது என தீர்ப்பளித்தது. அதையடுத்து மத்திய அரசை சந்தித்தும், மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என கோரிக்கை வைத்தோம்.

மேகதாது
பெங்களூர் நகர குடிநீர் தேவைக்காக மேகதாது அணை கட்டப்படுவதாகக் கர்நாடகா சொல்கிறது. மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேகதாது திட்டத்துக்கு ஒப்புதல் பெற்றவர்கள், கொடுத்தவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இனியும் மேகதாது திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கக்கூடாது'' என சட்டமன்றத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதையடுத்து அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தின் மீது பேசினர். மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
விஜய் கொஞ்சம் அட்ரஸை மாற்றி அனுப்பி இருந்தால்.. பிரச்சனை சரி ஆகி இருக்கும்! மேகதாது கேசில் சொதப்பல் -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
இது அப்பட்டமான விதிமீறல்.. மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது.. மோடிக்கு விஜய் கடிதம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications