சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பூம்புகார் கடலில் கலக்கும் காவிரி ஆறு.. ரம்மியமான காட்சி.. வைரல் வீடியோ! ஆனால்...!

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி ஆறு தமிழகத்தின் பூம்புகார் கடலில் கலக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. காவிரி தண்ணீருக்காக இரு மாநிலங்களும் போராடி கொண்டிருக்கும் போது இது போல் கடலில் கலக்கும் நீரை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசு ஏன் சேமித்து வைக்கும் திட்டங்களில் இறங்கக் கூடாது என்ற கேள்வி எழுகிறது.

Recommended Video

    பூம்புகார் கடலில் கலக்கும் காவிரி ஆறு.. ரம்மியமான காட்சி - வைரல் வீடியோ!

    இந்தியாவில் தென் பகுதியில் அமைந்துள்ளது காவிரி ஆறு. இது கர்நாடகா மாநிலத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவிரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது.

    இதன் நீளம் 800 கி.மீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாவும் தமிழகத்தில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று பூம்புகார் எனும் இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது.

    வடகிழக்குப் பருவமழையால் 11 ஆண்டுகளுக்குப் பின் வளமாக ஓடும் காவிரி ஆறு - அதிகரித்த உபரி நீர் வடகிழக்குப் பருவமழையால் 11 ஆண்டுகளுக்குப் பின் வளமாக ஓடும் காவிரி ஆறு - அதிகரித்த உபரி நீர்

    தமிழகம்

    தமிழகம்

    காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழகக் காவிரிப் பாசனம் தொடங்குகிறது.

    எங்கு பாய்கிறது

    எங்கு பாய்கிறது

    இந்த காவிரி ஆறு பகமண்டலம், சூழ்சால்நகர், மைசூர் மாவட்டம், ஸ்ரீரங்கம், சிவசமுத்திரம், கோசால் மலைத் தொடர், மேகதாது, ஒகேனக்கல், ஈரோடு, பள்ளிபாளையம், திருச்சி, திருவையாறு, பூம்புகார் ஆகிய இடங்களில் பாய்கிறது.

    ரம்மியம்

    ரம்மியம்

    இந்த ஆறு கடலில் கலக்கும் ரம்மியமான காட்சி வீடியோ வைரலாகி வருகிறது. இதில் ஒரு பெரிய கால்வாய் மாதிரியான இடத்திலிருந்து அழகாக தத்தி தத்தி குழந்தை போல வருகிறது காவிரி நதி. இது நேராக பூம்புகாரில் உள்ள கடற்கரையில் கலக்கிறது. இந்த வீடியோவில் இயற்கையின் அழகை பார்க்கும் போது அழகாக இருக்கிறது.

    காவிரி நீர்

    காவிரி நீர்

    ஆனால் தாய் என அழைக்கப்படும் காவிரி நீரை சேமித்து வைக்காமல் இப்படி வீணாக கடலில் கொண்டு போய் கலப்பதை பார்த்து விவசாயிகள், சமூக ஆர்வலர்களின் மனம் வெதும்புகிறது. இந்த காவிரி நீருக்காக இரு மாநிலங்களும் போராடி வரும் நிலையில் இப்படி வீணாக போய் கடலில் கலக்கும் தண்ணீரை புதிய தொழில்நுட்பம் கொண்டு சேமித்து வைத்து தமிழக மக்களின் குடிநீர் தேவை, விவசாய பாசன தேவை உள்ளிட்டவைகளுக்கு ஏன் பயன்படுத்தக் கூடாது என்ற கேள்வியும் எழுகிறது.

    English summary
    River Thaai Cauvery joins in Poompuhar sea area. Video goes viral in Social Media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X