ரூ.18 கோடி ஹவாலா பண மோசடி.. இளைஞருக்கு 7 ஆண்டு சிறை.. சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: ரூ.18 கோடி ஹவாலா பண மோசடி வழக்கில் சென்னையை சேர்ந்த இளைஞருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அங்கப்பன் நாயக்கன் தெருவை சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பல கோடி மதிப்புள்ள மின்னணு சாதனங்களை சரக்கு விமானங்களிலும், கப்பல்கள் மூலமாகவும் இறக்குமதி செய்துள்ளார்.

ரூ.18 கோடி ஹவாலா பணம்
போலி ஆவணங்கள் தயாரித்து கணக்கில் வராத ஹவாலா ரூ.18 கோடியே 66 லட்சத்து 54 ஆயிரத்தை வெளி நாடுகளுக்கு பணபரிமாற்றம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து லியாகத் அலியை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் சி.பி.ஐ போலீசார் கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக சென்னை மண்டல மத்திய அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தியது.அப்போது இந்தியன் வங்கியின் சென்னை ஆயிரம் விளக்கு கிளையில் அவரது வங்கி கணக்கில் இருந்து 1 கோடியே 75 ஆயிரம் ரூபாயை முடக்கியது.

தீர்ப்பு கூறப்பட்டுள்ளது
இந்த வழக்கு விசாரணை சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி திருவேங்கட சீனிவாசன் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் லியாகத் அலிகான் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

7 ஆண்டு சிறை தண்டனை
இதனால் லியாகத் அலிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ.1 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அவரது வங்கி கணக்கில் இருந்து முடக்கம் செய்யப்பட்ட தொகையை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.மேலும் நீதிபதி தனது தீர்ப்பில் நாட்டின் நிதி நிர்வாக ஒழுங்கு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மோசமடைவதற்கு பண மோசடி குற்றங்கள் மிகவும் அபாயகரமான ஒன்றாக இருக்கின்ற நிலையில், அதை தடுப்பது நீதிமன்றத்தின் கடமையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தீய எண்ணங்களுக்கு மூல காரணம்
பணம் தீயது அல்ல, தீய எண்ணங்களுக்கு மூல காரணம் என்று தேசத்தந்தை மகாத்மாகாந்தி கூறிய கருத்துப்படி, பணம் தீய எண்ணங்களுக்கு மூல காரணமாக அமையும்பட்சத்தில் அது சமுதாயத்தில் பொருளாதார குற்றத்தை அதிகரிக்க செய்து விடும் என்றும், அதை தடுப்பதற்கு சரியான நடவடிக்கை தேவை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications