அதிமுகவிற்கு செக் வைத்த டெல்லி.. மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு.. ட்விஸ்ட்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் சிலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

அதிமுக பிரமுகர் நல்லதம்பி என்பவர் மூலம் 33 பேரிடம் மொத்தம் ₹3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக புகார். 2021ல் பதியப்பட்ட வழக்கில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அடுத்த கட்டமாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது சிபிஐ.
வழக்கு பின்னணி
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ஜாமீன் கிடைக்காத நிலையில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி இருந்தார். கடந்த 2022ல் இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
பாஜக வழக்கு
இத்தனை காலம் அதிமுக தலைவர்கள் மீதான வழக்குகளை டெல்லி கண்டுகொள்ளவில்லை. ஆனால் இப்போது திடீரென சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் உங்களை யாரும் காப்பாற்ற மாட்டார்கள். உங்களை கழற்றிவிட அதிமுகவில் ரெடியாகி இருக்கிறார்கள் என்று ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான சிலர் அவரிடம் கூறி இருக்கிறார்களாம். ஸ்டாலின் உங்கள் மீது கோபத்தில் இருக்கிறார்.
ஏற்கனவே இதே வழக்கில்தான் தமிழக அரசு சார்பாக நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள். இப்போது சிபிஐ உங்களை குறி வைத்து உள்ளது. இதனால் வழக்கில் பல சிக்கல்கள் ஏற்படலாம் என்று அவருக்கு நெருக்கமான சிலர் எச்சரித்து உள்ளார்களாம் .
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இத்தனை காலம் டெல்லி இந்த வழக்கை கண்டுகொள்ளவில்லை. இப்போது சிபிஐ இதில் வழக்கு பதிவு செய்திருப்பது அதிமுக மீதான டெல்லியின் நெருக்கடியோ என்று எண்ண தோன்றுகிறது.
நெருக்கடி
ஏற்கனவே அதிமுகவின் இரட்டை இலைக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக புகழேந்தி அளித்த மனுவை விரைவாக விசாரிக்கப்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில் விரைவில் தீர்வு வழங்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில்தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்கும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
தேர்தல் ஆணையம் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அப்போது எடப்பாடி பாஜகவோடு நெருக்கமாக இருந்தார். இப்போது இல்லை. இனி இவர்கள் சேர்வார்களா இல்லையா என்று தெரியவில்லை.
விஜய் உடன் எடப்பாடி சேர்ந்தால் அங்கே பாஜக வர வாய்ப்பு இல்லை. இதனால் எடப்பாடிக்கு கால் கட்டு போட பாஜக இரட்டை இலை சின்னத்தில் கை வைக்கலாம். தேர்தல் ஆணையத்தை வைத்து பாஜக செக் வைக்கலாம். இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. எளிதாக முடிய வேண்டிய விஷயம்.. முடிந்துவிட்டது என்று நினைத்த விஷயம் மீண்டும் பெரிதாகி உள்ளது.
சின்னம் வேண்டும் என்றால் எங்களுடன் கூட்டணி வையுங்கள் என்று பாஜக அதிமுகவிற்கு நெருக்கடி தர தொடங்கி உள்ளதோ என்ற விவாதமும் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக மாஜிக்கள் சிபிஐ மூலம் குறி வைக்கப்பட்டு வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications