தயவு தாட்சணையே கூடாது தாட்சாயினிக்கு.. செஞ்ச வேலையை பாருங்க.. சிசிடிவி வீடியோ
சென்னை: சென்னை ஜே ஜே நகர் பகுதியில் உள்ள நகைக்கடையில் பெண் ஒருவர் 3 சவரன் நகையை லாவகமாக திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அந்த பெண்ணை கைது செய்த போலீசார் உடந்தையாக இருந்த கணவனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை முகப்பேர் வளையாபதி சாலை உள்ள லஷ்மி ஜூவல்லரியின் உரிமையாளர் ப்ரீத்தம் குமார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக நகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த 26 ஆம் தேதி 3 மணி அளவில் கடையில் பணிபுரியும் ஊழியரான கைலாஷ் என்பவர் பெண் வாடிக்கையாளருக்கு 3 சவரன் எடை கொண்ட ஆறு நகைகளை காண்பித்து வைத்துள்ளார்.

எஸ்கேப்
அதில் ஒன்றை தேர்வு செய்த அந்தப் பெண்மணி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்து வருவதாக சென்றுவிடும் நேரத்தில் ஆறு செயினில் ஒரு செயினை லாவகமாக மறைத்து திருடிக்கொண்டு சென்று விட்டார். இது அப்போது அங்கிருந்தவர்களுக்கு தெரியவில்லை.

திருடிய பெண்
பின்னர் நகைகளை எண்ணி பார்க்கும் போது 3 சவரன் நகை ஒன்று குறைவது தெரியவந்தது. இது தொடர்பாக கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தாட்சாயினி (வயது 47) என்கிற பெண் ஒருவர் மறைத்து வைத்து எடுத்துக் கொண்டு செல்வது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு
இது தொடர்பாக சென்னை ஜே ஜே நகர் காவல் நிலையத்தில் ப்ரீத்தம் குமார் புகார் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததுடன், நகைகளை திருடிய தாட்சாயினி என்ற பெண்ணையும் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் சந்திரகுமாரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

திருடியுள்ளார்
குறிப்பாக தாட்சாயினி மீது ஏற்கனவே ஆவடி, பூந்தமல்லி, சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு , பூக்கடை, உள்ளிட்ட காவல் நிலையங்களில் இதுபோன்ற நகைகளை திருடிய செயல்களில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளது. ஒவ்வொரு முறை வெளியே வரும் போது நகைகளை திருடுவதையே வேலையாக வைத்திருந்திருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications