இல்லத்தரசிகளுக்கு நிம்மதி.. எகிறியது பெரிய வெங்காயம் விலை.. சட்டென மத்திய அரசு எடுத்த சூப்பர் அதிரடி
சென்னை: இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. வெங்காய விலை குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. என்ன அது?
நம் நாட்டில், காலநிலை மாற்றத்தினால் காய்கறிகளின் விலை திடீர் திடீரென மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தக்காளி விலை பதற வைத்து.. இஞ்சி விலையோ கதற வைத்தது.. சின்ன வெங்காயத்தின் விலையோ அதிர வைத்தது..

கடந்த மாதத்தை காட்டிலும், இப்போதைக்கு தக்காளி விலை பரவாயில்லை.. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 40 முதல் 50 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், வெங்காய விலை உயர்ந்துவிட்டது..
ஆய்வறிக்கை: தற்போது பெய்து வரும் பருவமழையின் காரணத்தினால் பெரிய வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்துள்ளது.. இதனால், இல்லத்தரசிகள் விழிபிதுங்கி உள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு, கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டிருந்தது.. அதில், நாடு முழுவதும் தக்காளி விலை சராசரியாக கிலோ ரூ.120-ஐ கடந்தே பல நாட்களாக விற்பனையாகிவரும் நிலையில், வரும் செப்டம்பரில் இருந்து வெங்காய விலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது..
அதாவது, அக்டோபரில் காரிஃப் பயிர்கள் அறுவடையாகி வரும்வரை, இந்த விலையேற்றம் நீடிக்கலாம், செப்டம்பர் மாதத்தில் வெங்காய விலை கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படலாம்.
மழை நிலவரம்: இருப்பினும் கடந்த 2020-ல் ஏற்பட்ட வெங்காய விலை உயர்வுபோல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. வரத்து - தேவை ஏற்றத்தாழ்வால் இந்த விலையேற்றம் ஏற்படும். சில்லறைச் சந்தையில் இது செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து எதிரொலிக்க தொடங்கும். ஆகஸ்ட், செப்டம்பர் மழை நிலவரம் பொறுத்தே வெங்காயம் விளைச்சல் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.. வெங்காயத்தின் கொள்முதல் குறைந்துள்ளதால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் நுகர்வோருக்கு குறைந்த விலையில் விற்பதற்காக விடுவிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையிலேயே, இருப்பிலுள்ள 3 லட்சம் டன் வெங்காயத்தை விடுவிக்க அரசு இவ்வாறு முடிவு செய்துள்ளது.

அதிரடி முடிவு: வெங்காய விலை அதிகமாகும் நேரங்களில் தள்ளுபடி விலையில் நுகர்வோர் கூட்டுறவு மற்றும் பெரும் நிறுவனங்களின் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படி ஒரு அதிரடி வெளியாகி உள்ளது.
வெங்காயத்தின் அளவு கடந்த 4 வருடங்களில் மும்மடங்காக உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது, பெருத்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்து வருகிறது.
-
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications