தொகுதி மேம்பாட்டு நிதி 3-வது ஆண்டாக கட்...மக்களுக்கு எதுவுமே செய்ய முடியலையே... குமுறும் எம்.பிக்கள்
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 3-வது ஆண்டாக முடக்கப்பட உள்ளது. இதனால் தொகுதியில் நலத்திட்டங்கள் எதுவும் செய்ய முடியவில்லை என்பது எம்.பி.க்களின் குமுறலாக உள்ளது.
கொரோனா நோயின் தாக்குதலில் இருந்து தப்பிக்க 2020 மார்ச் 24-ந் தேதி முதல் தேசிய ஊரடங்கை அமல்படுத்தினார் பிரதமர் மோடி. கொரோனா வைரஸ் பெரிய அளவில் இந்தியாவை தாக்கத் துவங்கியது.

மத்திய அரசின் கஜானா முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு, ஒழிப்பு , மக்களை பாதுகாத்தல் என்ற மருத்துவ கட்டமைப்பிற்காகவே செலவிட வேண்டியதிருந்தது. இதனால், மக்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்கள் உள்ளிட்ட பொது திட்டங்களுக்கான நிதி கட்டமைப்பில் பெரிய அடி விழுந்தது.
அதற்காக, பல்வேறு வழிகளில் நிதி திரட்ட முடிவு செய்த பிரதமர் மோடி, எம்.பி.க்களின் தொகுதி வளர்ச்சிக்கான நிதியில் கை வைத்தார். அதாவது, ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் அதன் வளர்ச்சிக்காக ஒரு வருடத்துக்கு 5 கோடி ரூபாய் ஒதுக்குகிறது மத்திய அரசு. அந்த தொகுதி நிதி 2 ஆண்டுகளுக்கு கிடையாது என அறிவித்தது.
இதன் மூலம் 7,800 கோடி ரூபாய் அரசின் கஜானாவில் சேர்க்கப்பட்டது. கொரோனா ஒழிப்பின் மருத்துவ தேவைகளுக்காக அந்த நிதி செலவிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அந்த 2 ஆண்டு காலக்கெடு வருகிற மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. ஆனால், நிதி நிலைமை சரியாகாததால் மேலும் 1 ஆண்டுக்கு (2022-23 நிதி ஆண்டு ) எம்.பி.க்களின் தொகுதி நிதியை கட் செய்ய மத்திய நிதியமைச்சகத்துடன் பிரதமர் அலுவலகம் விவாதித்திருக்கிறதாம். ஒரு வருடம் நீட்டிப்பதன் மூலம் 3,900 கோடி ரூபாய் கிடைக்கும் என திட்டமிட்டப்படுகிறதாம்.
ஏற்கனவே, நாடாளுமன்ற தொகுதி நிதி 2 வருடங்களுக்கு பிடித்தம் செய்யப்பட்டதால் தொகுதிக்காக எதையுமே செய்ய முடியவில்லை என எம்.பி.க்கள் குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது மேலும் 1 ஆண்டு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்தால் அது மக்களுக்கு செய்கிற அநியாயம் என்கிற குரல் எம்.பி.க்கள் மத்தியில் இருக்கிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications