ராமர் பாலம் வழக்கு: 8 வருஷமா பதில் மனு தாக்கல் செய்யாத பாஜக அரசு- உச்சநீதிமன்றத்தில் சு.சுவாமி!
சென்னை: ராமர் பாலத்தை புராதான சின்னமாக அறிவிக்க கோரும் வழக்கில் 8 ஆண்டுகளாக மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டார்.
தமிழகத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் ராமேஸ்வரம் பாம்பன் தீவுகளுக்கும் இலங்கைக்கும் இடையே மணல் திட்டுகள் தொடர்ச்சியாக உள்ளன. இந்த திட்டுகள் தொடர்ச்சியாக இருப்பதால் ஆதாம் பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. புராணங்கள் அடிப்படையில் இது கடவுள் ராமர், அணில் மற்றும் அனுமான் உதவியுடன் கட்டிய இலங்கைக்கான பாலம் என்கிற கருத்தும் உள்ளது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் கட்டிய பாலம் என்கின்றனர் நம்பிக்கையாளர்கள்.

ராமர் பாலம் சர்ச்சை
இந்த ராமர் பாலம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கி விட்டிருக்கிறது. இந்துத்துவவாதிகள் ராமர் பாலம், ராமர் பாலம் என பேசிய போதுதான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, இப்படி ஒரு பாலம் கட்டுவதற்கு ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என கேள்வி கேட்டார். இந்த கேள்வியால் இந்துத்துவவாதிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். நாடு முழுவதும் கருணாநிதியின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில்தான் கருணாநிதியின் தலைக்கு இந்து தீவிரவாதிகள் விலைவைத்து அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தனர்.

சேது சமுத்திர திட்டம்
சேதுக்கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முனையும் போது எல்லாம் தமிழகத்தின் நலனுக்கு எதிரானவர்கள் இந்த ராமர் பாலம் விவகாரத்தை முன்வைப்பதும் வழக்கமாக இருந்தது. இலங்கையின் மன்னார் மற்றும் பாக்ஜலசந்தி நீரிணைப்பை இணைக்க 83 கி.மீ ஆழத்துக்கு கால்வாய் உருவாக்கி கப்பல் போக்குவரத்து மேற்கொள்வதுதான் சேதுசமுத்திர கால்வாய் திட்டம். அப்படி செய்யும் போது இலங்கையின் கொழும்பை சுற்றி அரபிக் கடலுக்கு கப்பல்கள் செல்லாமல் வங்க கடல் வழியாகவே சென்றுவிடலாம். இதன் மூலம் தமிழகம் பெருமளவுக்கும் வளமடையும்.

சுப்பிரமணியன் சுவாமி வழக்கு
ஆனால் பல அமைப்புகள் சேதுக்கால்வாய் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சேதுக்கால்வாய் திட்டத்தால் ராமர் கட்டிய பாலம் சேதமடையும்; ஆகையால் சேதுக் கால்வாய் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கு முன்னர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இதனால் சேது கால்வாய் திட்டத்துக்கு தடையும் விதிக்கப்பட்டது. அதன் பின்னர் ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி மனு ஒன்றையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

சு.சுவாமி முறையீடு
சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு நீண்டகாலமாக கிடப்பில் இருந்து வருகிறது. இந்த மனு மீது விசாரணை நடைபெறும் பலமுறை தகவல்கள் வெளியாகியும் விசாரிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் சுப்பிரமணியன் சுவாமி ஆஜரானர். அப்போது, மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை என்று முறையிட்டார். இதையடுத்து மத்திய அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி சந்திரசூட் இது தொடர்பாக விளக்கம் கேட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications