சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று முதல் தமிழகத்தில் 5 நாட்கள் கொட்டப்போகும் கன மழை - சென்னைக்கும் சேர்த்துதான் வார்னிங்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Recommended Video

    TamilnaduRain | தமிழகத்தில் இயல்பை விட 101 சதவீதம் கூடுதல் மழை! *Weather

    கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ACS மருத்துவக் கல்லூரியில் 8 செ.மீ. மழையும், பண்ருட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வலங்கைமான், சென்னை விமான நிலையம் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ. மழையும், செய்யூர், மகாபலிபுரம், ஸ்ரீபெரும்புதூர், சென்னை DGP அலுவலகம், செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
    அம்பத்தூர், அன்னவாசல், சென்னை தரமணி, அண்ணா பல்கலைக்கழகம், கந்தர்வகோட்டை, வாடிப்பட்டி, பூந்தமல்லி, பூண்டி மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    திருக்கழுகுன்றம், திருச்சி விமான நிலையம், கலவை, சென்னை நுங்கம்பாக்கம், வெம்பாக்கம், சென்னை எம்ஜிஆர் நகர், அண்ணா பல்கலைக்கழகம், செய்யார், பொன்மலை, கேளம்பாக்கம், திருப்பத்தூர் திருவையாறு, பரங்கிப்பேட்டை, குடிமியான்மலை, வானமாதேவி, ஈச்சன்விடுதி, அயனாவரம், ஆதனக்கோட்டை, நந்தனம் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

    சோழிங்கநல்லூர், கொரட்டூர், கீரனூர், கோபிசெட்டிபாளையம், நன்னிலம், மரக்காணம், பெரம்பூர், KVK காட்டுக்குப்பம், ஈரோடு. தஞ்சை பாபநாசம், துவாக்குடி, கறம்பக்குடி, திருப்போரூர், கொடவாசல் நாமக்கல், ஆலந்தூர், பள்ளிக்கரணை, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

    சொட்ட சொட்ட நனைந்த சென்னை! ஒரே இரவில் புரட்டி போட்ட கனமழை! பெங்களூருக்கு யூடர்ன் போட்ட விமானங்கள்! சொட்ட சொட்ட நனைந்த சென்னை! ஒரே இரவில் புரட்டி போட்ட கனமழை! பெங்களூருக்கு யூடர்ன் போட்ட விமானங்கள்!

     வானிலை அறிவிப்பு

    வானிலை அறிவிப்பு

    தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

     26-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

    26-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

    வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை, டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

     சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

    சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

    சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

     மீனவர்களுக்கான எச்சரிக்கை

    மீனவர்களுக்கான எச்சரிக்கை

    குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    லட்சத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வரும் 26-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். என இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    English summary
    The Meteorological Department informed that there is a possibility of heavy rain in various districts of Tamil Nadu for 5 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X