திரையரங்குகள். பார்கள், உயிரியல் பூங்காக்கள்.. தமிழகத்தில் ஜூலை 5 முதல் எதற்கெல்லாம் தடை!
சென்னை: தமிழகத்தில் வரும் 5ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ள போதிலும், மாநிலம் விட்டு மாநிலம் பேருந்தகள், திரையரங்குகள், பார்கள், நீச்சல் குளங்கள். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உயிரியல் பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்பட சில செயல்பாடுகளுக்கு தடை தொடரும் என்று ஊரடங்கு தொடர்பான அரசின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க,.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கொரோனா பெருந்தொற்று ஒன்றிய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் 29.6.2021 அன்று அறிவித்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 5-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கொரோனா நோய்த் தொற்று வெகுவாக குறைந்துள்ள போதிலும், நோய்த் தொற்று பரவலைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 5-7-2021 முதல் 12-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

விமான பயணம்
மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. இதேபோல் மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது.

பார்களுக்கு தடை
திரையரங்குகளை திறக்க மாநிலம் முழுவதும் தடைவிதிக்கப்படுகிறது. மால்கள் திறக்கப்பட்டாலும் அதில் உள்ள திரையரங்குகள் செயல்பட அனுமதி இல்லை. மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டாலும் அமர்ந்து மது அருந்தும் மதுககூடங்கள் செயல்பட அரசு அனுமதிக்கவில்லை.

பொதுபோக்கு
நீச்சல் குளங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளும் தடை விதிக்கப்படுகிறது

உயிரியல் பூங்காக்கள்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயக்க அனுமதி இல்லை. உயிரியல் பூங்காக்கள் செயல்படவும் அனுமதி இல்லை. நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications