சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோடையிலும் நிரம்பி வழியும் செம்பரம்பாக்கம் ஏரி..உபரிநீர் திறப்பு - பாதுகாப்பாக இருங்க மக்களே!

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழிவதால் இன்று பிற்பகலில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கோடை மழை கொட்டித்தீர்த்ததால் சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழிகிறது. கோடையில் ஏரி நிரம்பியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ளதை அடுத்து பாதுகாப்பு கருதி இன்று பிற்பகல் வினாடிக்கு 250 கன அடி நீர் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    செம்பரம்பாக்கம் ஏரி..உபரிநீர் திறப்பு

    சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி பரந்து விரிந்து 6,300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் மொத்தமாக 3,645 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.

    இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    சென்னையில் இரவு முழுக்க பெய்த மழை.. பல பகுதிகளில் தேங்கிய நீர்.. இன்று மழை பெய்யுமா? ரிப்போர்ட் சென்னையில் இரவு முழுக்க பெய்த மழை.. பல பகுதிகளில் தேங்கிய நீர்.. இன்று மழை பெய்யுமா? ரிப்போர்ட்

    பருவமழை

    பருவமழை

    தென்மேற்குப் பருவமழை தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பெய்து வருகிறது. சென்னைக்கு வடகிழக்குப் பருவமழை காலத்தில்தான் நல்ல மழை கிடைக்கும். வடகிழக்குப் பருவமழையால் ஏரிகள், நீர் நிலைகள் நிரம்பி வழியும். சென்னையில் கோடை காலத்தில் மழை கொட்டித்தீர்த்துள்ளது.

    கனமழை

    கனமழை

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகப் சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , திருவொற்றியூர், எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை என பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பெய்து உள்ளது.

     நிரம்பிய ஏரி

    நிரம்பிய ஏரி


    திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கிருஷ்ணா கால்வாயில் நீர்வரத்து அதிகரித்தது.
    கோடை மழை கொட்டித்தீர்த்ததால் சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழிகிறது.
    எரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,700 கனஅடியாக உள்ளது. இந்நிலையில் தலைநகர் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

    23 அடியை எட்டிய ஏரி

    23 அடியை எட்டிய ஏரி

    செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 24 அடியாக உள்ள நிலையில், 23. 36 அடியை எட்டி உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு அளவான 23 அடியை தாண்டியதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியானது.

     உபரி நீர் வெளியேற்றம்

    உபரி நீர் வெளியேற்றம்

    ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ளதை அடுத்து பாதுகாப்பு கருதி இன்று பிற்பகல் வினாடிக்கு 250 கன அடி நீர் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோரத்தில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பெருவெள்ளம்

    பெருவெள்ளம்

    கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. தொடர்மழையும் பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெருவெள்ளம் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chembarambakkam Lake, the source of drinking water in Chennai, is overflowing due to the summer rains. People are happy because the lake is full in summer. As the lake is about to reach full capacity, 250 cubic feet of water per second is expected to be released this afternoon for safety reasons.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X