அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆணையர் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில், காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துக்கு தமிழகத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்களும் நடந்தன.

தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சென்னை ஹைகோர்ட் தாமாக முன் வந்து விசாரித்தது. அப்போது இந்த வழக்கை விசாரிக்க 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது. முன்னதாக இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி, அதிமுகவை சேர்ந்த வக்கீல் ஆர்.வரலட்சுமி, பாஜகவை சேர்ந்த வக்கீல் ஏற்காடு ஏ .மோகன்தாஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுநல வழக்குகளை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள்,'பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒரு குற்றவாளி என்று ஏன் கமிஷனர் விளக்கம் அளித்தார்? பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்த அரசிடம் அனுமதி பெற்றாரா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கில் அரசியல் சாயம் பூச விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள், பெண்ணின் சம்மதம் இன்றி, அவரை தொட யாருக்கும் உரிமை கிடையாது. வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம், உளவியல் சிகிச்சை மூலம் தைரியத்தை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் மாணவி படிப்பை தொடர, கல்விக் கட்டணம் விடுதி கட்டணம் என எந்த கட்டணமும் அவரிடம் இருந்து வசூல் செய்யக்கூடாது. மாணவி பாதிக்கப்பட்ட அடுத்த 2வது நாளில், அரசிடம் முறையான அனுமதி பெறாமல் செய்தியாளர்களை வரவைத்து வழக்கில் ஒரு குற்றவாளி தான் சம்பந்தப்பட்டு இருப்பதாக போலீஸ் கமிஷனர் பேட்டி அளித்து இருக்கிறார். இது குறித்து தமிழக அரசு அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும். மேலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கினை இனியும் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தால் சரியாக இருக்காது. ஏற்கனவே இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும் என்றும், இந்த அதிகாரிகள், பாலியல் வழக்கோடு, எப் ஐ ஆர் கசிந்த வழக்கையும் சேர்த்து விசாரித்து விரைவாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டுமென்று உத்தவிட்டார். மேலும் முதல் தகவல் அறிக்கை கசிந்ததனால், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications