எங்க புள்ளீங்கோ எல்லாம் பயங்கரம்! சென்னையை கதிகலங்க வைக்கும் ‘பைக்கர்ஸ்’! அலறி ஓடும் வாகன ஓட்டிகள்!
சென்னை : சென்னை அண்ணா சாலையில் நள்ளிரவில் வாகன ஓட்டிகள் அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் மீண்டும் பைக்கர்ஸின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் அதிவேகமாக வாகனம் ஓட்டி பைக் சாகசத்தில் ஈடுபடுவோரை காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையே தற்போது வரை உள்ளது.
சென்னையில் முக்கிய சாலைகளான சென்னை மெரினா காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இரவு நேரங்களில், பைக் சாகச பந்தயத்தில் இளைஞர்களை ஈடுபடுவதும் , இதனால் அடிக்கடி விபத்துகள் நடப்பதும் அதிகரித்து வருகிறது.

பைக் சாகசம்
இந்நிலையில் அண்ணா சாலையில் நள்ளிரவில் வாகன ஓட்டிகள் அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் பைக் ரேஸ் ஓட்டுபவர்கள் மற்றும் சாலைகளில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்தது.

அண்ணா சாலை’
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சென்னையின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சாகசம் செய்தபடி சென்றனர். மின்னல் வேகத்தில் சாலையில் முன் வீல்களை தூக்கியபடி சீறிப் பாய்ந்த பைக்கர்ஸ்களால் நள்ளிரவில் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனங்களை இயக்கினர்.

புகார்
சென்னையை பொறுத்தவரை தற்போது மோட்டார் சைக்கிள் பந்தயங்களும் சாகசம் செய்து வாகனம் ஓட்டுவது போன்ற சம்பவங்கள் அரங்கேற தொடங்கியுள்ளன. இவற்றை அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் உள்ள போலீசாரும் கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் அப்பாவி வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

போலீசார் தீவிரம்
இந்நிலையில் சென்னை சாலையில் அட்டகாசம் செய்யும் புள்ளீங்கக்கோளின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனை அடுத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் வாகனங்களின் எண்களை வைத்து சாலையில் அட்டகாசத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications