கிளாம்பாக்கத்தை விட்ருங்க.. மொத்தமா "கலர்" மாறும் வடசென்னையை பாருங்க.. சுழலும் மாநகராட்சி ஆபீசர்ஸ்
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு எப்போது திறக்கப்படுமோ? என்ற எதிர்பார்ப்பில், ஒட்டுமொத்த சென்னைவாசிகளும் உள்ள நிலையில், மற்றொருபக்கம் சத்தமே இல்லாமல் அதிரடிகளை செய்து, சென்னை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது மாநகராட்சி.
மழை என்றாலே சென்னைவாசிகள் நடுங்கிப் போய்விடுவார்கள்.. காரணம், மழைநீர் தேங்குவது என்பது மிகப்பெரிய பிரச்சினையாக கலக்கம் தந்துகொண்டிருந்தது. ஆனால், கடந்த ஒரு வருட காலமாகவே, சென்னையில் சாலை பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் வேகமெடுத்துள்ளன.

மேயர் பிரியா: அந்தவகையில், பம்பரமாக சுழன்று சுழன்று பணிகளை மேற்கொண்டுவரும் சென்னை மேயர் பிரியாவின் செயல்பாடுகள், சென்னைவாசிகளிடம் பரவலாக வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த வருடம், சென்னையில் மழை வெள்ளத்தின்போது, நள்ளிரவு என்றும் பாராமல், ஸ்பாட்டுக்கே சென்று ஆய்வு நடத்தி அசரடித்தார்.. மழை நீர் தேங்காத வகையில் மாநகராட்சி ஆணையருடன் சேர்ந்து எடுத்த நடவடிக்கைகள் மக்களை திரும்பி பார்க்க வைத்தன..
மழைநீர் வடிகால்: சமீபத்தில் கோடை பெய்த போதும், சென்னையில் எங்குமே மழைநீர் தேங்காத அளவுக்கு, வடிகால் நீர்வசதிகள் செய்யப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தையுமே திரும்பி பார்க்க வைத்திருந்தது. மழைநீர் வடிகால், சாலை வசதிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதால்தான், 'மக்களைத் தேடி மேயர்' திட்டத்தின் கீழ் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம், சென்னை மாநகராட்சியின் மண்டலங்களிலும் பலகட்டங்களாக நடந்தது..
அந்த நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, "மழைநீர் வடிகால் மற்றும் சாலைகளை சீரமைப்பது தொடர்பாக அதிக புகார்கள் முகாமில் வருவதால், சென்னை மாநாகராட்சி இந்த இரண்டு புகார்கள் மீது அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறியிருந்தார். அத்துடன், செப்டம்பர் 15ம் தேதிக்குள் மழைநீர் வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும் உறுதி தந்திருந்தார்..
சாலைப்பணிகள்: இதையடுத்து, சென்னையில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கவும், மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இப்போது அந்த பணிகள் முழுவீச்சில் நடந்துள்ளன.. மற்றொருபுறம், பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
மற்றொருபுறம், மழைநீர் பகுதிகளை கண்டறிந்து, அங்கு தண்ணீர் தேங்குவதை தடுக்க 762 கோடி ரூபாய் மதிப்பில் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. மழைநீர் தேங்காத வகையில், சென்னை முழுவதுமே இந்த கால்வாய்கள் அமைக்கும் பணி துரிதமாகி உள்ளது..
ராதாகிருஷ்ணன்: எப்படியும் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கக்கூடும் என்ற நிலையில், மாநகராட்சிகள் பணிகளை அதிகரித்துள்ளனர். குறிப்பாக, நீர்நிலைகளை தூர்வாருதல், மழைநீர் வடிகால் அமைப்பது என விறுவிறுப்பான வேலைகள் நடக்கின்றன. இந்த பணிகளை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பகுதிக்கு சென்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே, வடசென்னை கொசஸ்தலை ஆற்று வடிநில பகுதிகளில் 484 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகளும், தென்சென்னை பகுதியில் 22 கிலோ மீட்டர் வரை பணிகளும் நிறைவடைந்துள்ளது.
ஜரூர் வேகம்: சென்னையின் 15 மண்டலங்களிலும் 28 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று மாநகராட்சி தரப்பில் சொல்கிறார்கள். ஆக, வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே அனைத்து பணிகளும் முடியும் என்பதால், சென்னை மக்களுக்கு நிம்மதி உணர்வு ஏற்பட்டுள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications