ரமணா பட பாணியில்.. சென்னை அரசு மருத்துவமனையில்.. உயிரிழந்த குழந்தைக்கு 40 நிமிடங்கள் சிகிச்சை?
சென்னை: ஈஞ்சம்பாக்கம் நகர்ப்புற சமூக நல மையத்தில் மூன்று வயது ஆண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்ட போதிலும், சுமார் 40 நிமிடங்கள் அந்த குழந்தைக்குச் சிகிச்சை அளித்ததாகப் பெற்றோர் கூறுகிறார்கள். அந்த சமூக நல மையத்தில் போதிய டாக்டர்கள் மற்றும் அவசர மருத்துவ வசதிகள் இல்லை என்றும் இதன் காரணமாகவே தங்கள் குழந்தை உயிரிழந்ததாக அக்குழந்தையின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் 3 வயது ஆண் குழந்தை ஒன்று நீச்சல் குளத்தில் திடீரென தவறி விழுந்துவிட்டது. இதைப் பார்த்த பெற்றோர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஈஞ்சம்பாக்கம் சமூக நல மையத்திற்கு விரைந்தனர்.

இருப்பினும், மருத்துவர்களால் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. கடந்த செப். 2ம் தேதி இந்தச் சம்பவம் நடந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உயிரிழப்பு: அதாவது உயிரிழந்த குழந்தையின் தந்தை சுகுமார் அங்குள்ள ஒருவரது வீட்டில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளனர். இதனால் சுகுமாரின் தந்தை அந்த பங்களாவின் ஊழியர்கள் தங்க இருக்கும் இடத்திலேயே குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். அங்கு தான் 3 வயது குழந்தை எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தில் விழுந்துள்ளது. இதையடுத்து பெற்றோர் தங்கள் குழந்தையை ஈஞ்சம்பாக்கம் நகர்ப்புற சமூக நல மையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பெற்றோர் தகவல்: இது தொடர்பாக அக்குழந்தையின் தந்தை கூறுகையில், "சிபிஆர் மட்டும் செய்தனர். பிறகு சில குழாய்களைச் செருகி ஏதேதோ செய்தனர். சுமார் 40 நிமிடங்கள் இதையே தான் செய்தனர். அதன் பின்னரே குழந்தையை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லச் சொன்னார்கள். இதற்கு ஆம்புலன்ஸ் கூட தரவில்லை. கேட்டால் ரிப்பேர் எனச் சொல்லிவிட்டார்கள். இதனால் தனியாக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கூட்டிச் சென்றோம்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நீச்சல் குளத்தில் குழந்தையை பறிகொடுத்த பெற்றோர்.. கண்ணீர் மல்க கோரிக்கை
அங்குக் குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக சொன்னார்கள். சமூக நல மையத்தில் சிகிச்சை அளிக்கவில்லை. அவசர சிகிச்சைக்கு உரிய உபகரணங்கள் இல்லை என்று முன்பே கூறியிருந்தால் நாங்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருப்போம்" என்றனர்.
மருத்துவமனை ஊழியர்கள்: அதேநேரம் இந்தச் சம்பவம் குறித்து மருத்துவமனை ஊழியர்கள் வேறு விதமாகக் கூறுகிறார்கள். அதாவது குழந்தையை அழைத்து வந்த போதே பரிசோதனை செய்துவிட்டு அக்குழந்தை உயிரிழந்துவிட்டதாக அவர்கள் பெற்றோரிடம் கூறினார்களாம். ஆனால், குழந்தையின் தாய் "எப்படியாவது காப்பாற்றுங்கள்" என்று கண்ணீர்விட்டு அழுதுள்ளார். அவர் வேறு எதையும் ஏற்கும் மனநிலையில் இல்லாததாலேயே சிகிச்சை அளித்தது போலக் காட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், இறந்தவர்களின் உடல்களைக் கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் பயன்படுத்தக் கூடாது என்று விதி இருப்பதாலேயே, ஆம்புலன்ஸ் ரிப்பேர் என அவர்கள் சொன்னதாகவும் கூறுகின்றனர்.
தெளிவு இல்லை: இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதில் இன்னுமே தெளிவில்லாமலேயே இருக்கிறது. குழந்தையின் பெற்றோர்கள் உரிய உபகரணங்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியவில்லை என்றும் இதுவே தனது மகனின் மரணத்திற்குக் காரணம் என்கிறார்கள். இதை மறைக்கவே வேறு காரணங்களைச் சொல்வதாகக் கூறுகிறார்கள்.
மேலும், குழந்தை சமூக நல மையத்திற்கு அழைத்து வரப்பட்ட போதே உயிரிழந்து இருந்ததாலும், அதைப் பெற்றோரிடம் சொல்லி இருக்க வேண்டும் என்றும் தாய் அழுதார் என்பதால் சிகிச்சை அளித்து போலக் காட்டிக் கொண்டதாகக் கூறுவது எல்லாம் அலட்சியத்தின் உச்சம் என சமூக செயற்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications