மொத்தமாக ECR-ஐ காலி செய்த விஜய்! இசிஆர் கடற்கரை சொகுசு வீடுகளுக்கு பூட்டு? 15 நாள் கெடு விதித்த அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிகளில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள ஆடம்பர பங்களாக்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் மீது பெருநகர சென்னை மாநகராட்சி தீவிர கள நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் உத்தண்டி ஆகிய பகுதிகளில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள 21 பிரம்மாண்ட சொகுசு வீடுகளை அடுத்த 15 நாட்களுக்குள் காலி செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Chennai ECR CRZ Violation

பூட்டி சீல் வைக்க முடிவு

குறிப்பிட்ட 15 நாள் காலக்கெடு முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட 21 கட்டிடங்களுக்கும் பூட்டுப் போட்டு 'சீல்' வைக்கப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து சட்ட விதிகளின்படி இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த விவகாரத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையிடம் வீட்டு உரிமையாளர்கள் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் அண்மையில் நிராகரிக்கப்பட்டன. சுமார் 10 முதல் 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த மனுக்கள் தீவிர ஆய்வுக்குப் பின் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், தற்போது மாநகராட்சி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதுதவிர, அனுமதிக்கப்பட்ட தளப் பரப்பளவுக் குறியீட்டை விடக் கூடுதலாகக் கட்டப்பட்டுள்ள மேலும் 3 வீடுகளின் உரிமையாளர்களுக்கு, விதிமீறல்களை உடனடியாகச் சரிசெய்து மாற்றியமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிஆர்இசட் விதிகள் சொல்வது என்ன?

மத்திய அரசின் CRZ-II வழிகாட்டுதல்களின்படி, 1991-ஆம் ஆண்டுக்கு முன்பே பயன்பாட்டில் இருந்த அங்கீகரிக்கப்பட்ட சாலைகள் அல்லது உள்கட்டமைப்புகளுக்கு நிலப்பரப்புப் பகுதியிலேயே (Landward side) புதிய கட்டுமானங்கள் அனுமதிக்கப்படும். மேலும், இப்பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச FSI அளவு 0.8 மட்டுமே ஆகும்.

தற்போது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள கட்டிடங்கள் சென்னை மாநகராட்சியின் மண்டலம் 15-க்கு உட்பட்ட 192, 194 மற்றும் 197 ஆகிய வார்டுகளில் அமைந்துள்ளன. அனுமதிக்கப்பட்ட 0.8 FSI வரம்பை மீறியுள்ள வீடுகளை மாற்றி அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளோம் என்றும், கடற்கரையோர இயற்கை சூழல் மற்றும் கடலோர சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கும் நோக்கில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நீதிமன்றப் படிகளை ஏறிய உரிமையாளர்கள்

கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடற்கரையை ஆக்கிரமித்தும், கடலோர மண்டல விதிமுறைகளை மீறியும் கட்டப்பட்டுள்ள சுமார் 700 கட்டிடங்களை மாநகராட்சி 2020-ஆம் ஆண்டிலேயே முழுமையாகக் கணக்கெடுத்துப் பட்டியலிட்டது. எனினும், கொரோனா பெருந்தொற்றுப் பரவல், அடுத்தடுத்து வந்த பொதுத்தேர்தல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக இந்த நடவடிக்கைகள் தற்காலிகமாகத் தள்ளிப்போயின.

தற்போதைய சூழலில், மாநகராட்சியின் இந்நடவடிக்கையை எதிர்த்து சுமார் 400 கட்டிட உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். மேலும் 400 பேர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையிடம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், கூடுதல் செயலாளர் அளவிலான அதிகாரிகள் இந்த வழக்குகளைத் தனித்தனியாக மறுஆய்வு செய்து வருகின்றனர்.

குடியிருப்பாளர்களின் வேதனை

மாநகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து கடற்கரையோரக் குடியிருப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். "பல ஆண்டுகளுக்கு முன்பு, அரசு அமைப்புகளிடம் முறையான அனுமதி பெற்றே நாங்கள் இந்த வீடுகளைக் கட்டினோம். அக்காலகட்டத்தில் CRZ விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்குப் பெரிதாக இல்லை. கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து வீடுகளைக் கட்டிவிட்டு, பல ஆண்டுகளாகச் சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் வரி ஆகிய அனைத்தையும் அரசுக்குத் தவறாமல் செலுத்தி வருகிறோம். எனவே, பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டிடங்களுக்கு விதிவிலக்கு அளித்துவிட்டு, புதிதாக வரும் விதிமீறல் கட்டுமானங்களை மட்டும் அரசு தடுக்க வேண்டும்" என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடற்கரையை ஒட்டித் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் சாலைகளால் கடல்சார் சூழலியல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகத் தொடரப்பட்ட புகார்களின் அடிப்படையில், சுற்றுச்சூழல் விதிகளின்படி இந்நடவடிக்கை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+