பெரிதாகும் சென்னை.. மாநகராட்சி உடன் இணைக்கப்படும் 4 புதிய ஏரியாக்கள்.. அடித்தது ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை பெருங்காரத்திற்குள் புதிதாக பல கிராமங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே 2022ல் சென்னை விரிவாக்கப்பட்டது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வானகரம், அயனம்பாக்கம், அடையாலம்பட்டு ஆகியவற்றை பெரு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கும் பணியை தமிழக அரசு தொடங்க உள்ளது.

அதேபோல் மேடவாக்கத்தை சென்னை மாநகராட்சி உடன் இணைக்கும் முடிவும் எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சென்னையின் அளவு பெரிதாகும். சென்னையை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த சில வருடங்களாகவே நடந்து கொண்டு இருக்கின்றன. அனைத்து திட்டங்களும் சென்னையில் ஒரு சில இடங்களுக்குள் குவிவதற்கு பதிலாக அருகாமையில் இருக்கும் மாவட்டங்களுக்கும் செல்லும் வகையில் சென்னை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

Chennai Expansion Medavakkam Vanagaram Ayanambakkam amp amp Adayalampattu will be added with city

முக்கியமாக சென்னையில் போக்குவரத்து நெரிசல், மக்கள் தொகை ஆகியவற்றையும் இடநெருக்கடியையும் கட்டுப்படுத்தும் விதமாக இந்த விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை அளவு: சென்னை தற்போது 1189 சதுர கிலோ மீட்டர் அளவில் உள்ளது. இது பெங்களூரின் அளவை விட அதிகம் ஆகும். பெங்களூர் நகரம் 741 சதுர கிலோ மீட்டர் கொண்டது. இந்த நிலையில்தான் சென்னையை 4 மடங்கிற்கும் மேல் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது சென்னையை 5,904 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூரை விட பல மடங்கு அதிகம் ஆகும்.

முன்னதாக சென்னையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டை சேர்ந்த சில கிராமங்கள் இடம்பெற்று இருந்தன. தற்போது காஞ்சிபுரத்தில் மேலும் சில கிராமங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அதேபோல் செங்கல்பட்டை சேர்ந்த பல கிராமங்கள் சென்னை பெருநகரத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன. ராணிப்பேட்டையை சேர்ந்த கிராமங்களும் இந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டு உள்ளன. திருவள்ளூரில் இருந்தும் பல கிராமங்கள் இந்த லிஸ்டில் இணைக்கப்பட்டு உள்ளன.

லிஸ்டு என்ன: அதன்படி மொத்தமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டையில் இருந்து 1225 கிராமங்கள் இந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டு உள்ளன. சென்னையின் வளர்ச்சியை மனதில் வைத்து இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னையின் பல்வேறு நீர் நிலைகளை மனதில் வைத்தும், மக்கள் தொகையை மனதில் வைத்தும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையின் வளர்ச்சி இன்னும் எளிதாகும். இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வானகரம், அயனம்பாக்கம், அடையாலம்பட்டு ஆகியவற்றை பெரு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கும் பணியை தமிழக அரசு தொடங்க உள்ளது.

அதேபோல் மேடவாக்கத்தை சென்னை மாநகராட்சி உடன் இணைக்கும் முடிவும் எடுக்கப்பட்டு உள்ளது. முதலீடுகளை அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையம் அதிக நெருக்கடி கொண்ட விமான நிலையமாக மாறிவிட்டது. இதன் காரணமாக இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று 15 வருடமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து சென்னையில் இரண்டாவது விமானம் நிலையம் அமைக்க பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கு நிலம் கையகப்படுத்த அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூரும் சென்னை பெருநகர் கட்டுப்பாட்டில் இனி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+