ஐபிஎல் சூதாட்டம்.. தோனி தொடர்ந்த வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி.. ஐபிஎஸ் அதிகாரிக்கு சிக்கல்?
சென்னை : கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அறிக்கை அளித்திருந்தார்.
அதற்கு எதிராகவும், அதை வைத்து விவாத நிகழ்ச்சி நடத்திய தொலைக்காட்சிக்கு எதிராகவும் 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி மனு தாக்கல் செய்தார் தோனி.
இதில் ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் அனுமதி அளித்தார். இந்நிலையில், ஐகோர்ட் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தோனி - சூதாட்டம்
கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. சூதாட்ட புகார் காரணமாக சிஎஸ்கே அணி 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், சிஎஸ்கே அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

தோனி தொடர்ந்த வழக்கு
அதன் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

ஐபிஎஸ் அதிகாரி
தோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டது. இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் ஒரு பதில் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் தன் மீது வழக்கு தொடர தமிழக அரசின் அனுமதி வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சம்பத் குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளதாக தோனி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு அனுமதி
ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ள கருத்துகள், நீதிமன்றங்களை களங்கப்படுத்தும் வகையில் இருப்பதுடன், நீதித்துறை மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்கும் வகையில் இருப்பதால், அவரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என அந்த மனுவில் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் அனுமதியைப் பெற்றே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் தோனி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஐகோர்ட் உத்தரவு
இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் நீதிபதி டீக்காராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 9ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications