புயல் இல்லை.. மேக வெடிப்பும் இல்லைனு சொல்றாங்க.. அப்போ சென்னையை புரட்டிப்போட்ட மழைக்கு என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நேற்று மாலை ஆரம்பித்த கனமழை இரவு முழுக்க கொட்டி தீர்த்தது. வடசென்னையில் தொடங்கி பெரும்பாலான இடங்களில் மழை கொட்டியது. மேக வெடிப்பு போல கொட்டி தீர்த்த இந்த கனமழைக்கு என்ன காரணம்.. இதன் பின்னணி தொடர்பாக நாம் பார்க்கலாம். அதேபோல வரும் நாட்களில் மழை தொடர்பாக வானிலை மையம் கூறியுள்ள எச்சரிக்கை குறித்தும் நாம் விரிவாக பார்க்கலாம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய இரண்டு நாட்களிலேயே சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. சென்னையில் கடந்த அக்டோபர் 17ம் தேதி காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் 69.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 37.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வடசென்னையில் நிலைமை இன்னுமே மோசம்! பெரம்பூரில் அதிகபட்சமாக 90 மிமீ மழை பெய்துள்ளது.

Chennai Heavy Rain

மேக வெடிப்பு இல்லை

மேக வெடிப்பு காரணமாக இந்த மழை பெய்திருக்கலாம் என முதலில் சொல்லப்பட்டது. ஏனென்றால் அந்தளவுக்கு குறுகிய நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இருப்பினும், மேக வெடிப்பு என்பதில் உண்மை இல்லை என வானிலை மையம் விளக்கமளித்திருந்தது

பருவமழை

தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரையில் பெய்யும் நிலையில், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழையே அதிக மழையை கொடுக்கும். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் நிலைமை வேறு. தமிழகத்துக்கு முக்கியமான மழை காலமாக வடகிழக்கு பருவமழையே உள்ளது. குறிப்பாக, சென்னைக்கு ஆண்டின் அதிகபட்ச மழைப்பொழிவு இந்த வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் தான் கிடைக்கும்.

அக்டோபர் மாதத்தில் தென்னிந்தியாவின் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்படுகிறது. வடகிழக்கிலிருந்து வீசும் காற்று வங்கக்கடல் பகுதியில் ஈரப்பதத்தை பெற்று, கிழக்கு கடற்கரை பகுதிகளில் மழையை கொண்டுவருகிறது.

வானிலை மையம்

கடந்த அக்டோபர் 15-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதே நாளில் தான் ஜூன் முதல் செப்டம்பர் வரை மழையை கொண்டுவரும் தென்மேற்கு பருவமழை நாட்டில் இருந்து முழுமையாக விலகியது.. தென்னிந்தியாவின் உள்பகுதிகளிலும், அதை ஒட்டிய வங்கக்கடல் பகுதியிலும் கிழக்கு மற்றும் வடகிழக்குத் திசை காற்று நிலைபெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரு காரணங்கள்

தற்போது பெய்துள்ள மழை, வங்கக்கடலில் உருவான புயலால் ஏற்பட்டது அல்ல. வளிமண்டலத்தின் மேலடுக்கில் நிலவிய இரு மாற்றங்களே இந்த கனமழைக்கு காரணமாகும். முதலாவது மேல் வளிமண்டலச் சுழற்சி. இது தரையிலிருந்து பல கிலோமீட்டர் உயரத்தில் காற்று சுழல்வதால் ஏற்படும் வானிலை அமைப்பாகும். இதனால் காற்று மேல்நோக்கி சென்று அடர்த்தியான மழை மேகங்கள் உருவாக்கும். வடதமிழகம் மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திரக் கடலோர பகுதிகளுக்கு மேலே, சுமார் 4.5 முதல் 5.8 கி.மீ. உயரத்தில் இந்தச் சுழற்சி நிலவியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது நீண்ட பகுதியாக பரவியிருக்கும் குறைந்த காற்றழுத்த மண்டலமாகும். இதன் வழியாக காற்று ஒன்று திரண்டு மேலே எழுவதால் மழை பெய்யக்கூடும். லட்சத்தீவின் வடபகுதியில் நிலவிய சுழற்சியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் வரை, கேரளா மற்றும் தமிழகம் வழியாக இந்தத் தாழ்வு மண்டலம் நீண்டிருந்தது. இந்த இரண்டும் தான் கனமழைக்கு காரணமாகும்.

கொட்டிய மழை

தமிழகத்தில் சென்னையைவிட அதிக மழை காஞ்சிபுரம் மாவட்டத்தின் உத்திரமேரூரில் பதிவாகியுள்ளது. அங்கு 24 மணி நேரத்தில் 148 மி.மீ. மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் 96 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றும் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 22ம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அக்டோபர் 20ம் தேதி வரை சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

நீர் தேங்கவில்லை

மழையால் பல பகுதிகளில் இரவு நேரங்களில் நீர் தேங்கியது. இருப்பினும், கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட மழை நீர் வடிகால் பணிகள் காரணமாக பெரும்பாலான இடங்களில் காலையில் மழைநீர் வடிந்துவிட்டது. சில தாழ்வான இடங்களில் இருந்த மழைநீரும் மோட்டர் மூலம் வெளியேற்ற்பப்டடது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+