8 வருசமா எங்க போனீங்க? டாஸ்மாக் முன்னாள் ஊழியருக்கு அபராதம் போட்ட ஐகோர்ட்.. மனுவும் தள்ளுபடி!
சென்னை : டாஸ்மாக் முன்னாள் ஊழியர் தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பின், தனக்கு மீண்டும் பணி வழங்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்கக் கோரி, டாஸ்மாக் முன்னாள் ஊழியர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தியுள்ளதாகக் கூறி, அவருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் ஊழியர் தொடர்ந்த வழக்கு
சென்னை அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் உதவியாளராக பணியாற்றிய விஜயகுமார் என்பவர், மூன்று ஆண்டுகளுக்கு மேல் அனுமதியின்றி விடுப்பு எடுத்துள்ளார். ஆனால் அவர் 8 ஆண்டுகளாக பணிக்கு வரவில்லை என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என விஜயகுமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

டிஸ்மிஸ் உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கடந்த 2013ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, விஜயகுமாரின் விண்ணப்பத்தை பரிசீலித்த டாஸ்மாக் நிர்வாகம், விசாரணை நடத்தி, அவரை பணிநீக்கம் செய்து 2014ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

8 ஆண்டுகள்
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தனது குடும்ப சூழ்நிலை மோசமாக உள்ளதாக கூறி, மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என விஜயகுமார், கடந்த ஆகஸ்ட் மாதம், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு விண்ணப்பித்தார். அதை பரிசீலிக்க கோரி மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அபராதம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், ஏற்கனவே 2014ல் பணி நீக்கம் செய்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடராமல், பணி நீக்கம் செய்யப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பணி வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்ததன் மூலம், விஜயகுமார், சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தியுள்ளதாக கூறி, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அவரது வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அபராதத் தொகையை 30 நாட்களுக்குள் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications