சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சொத்துகுவிப்பு..எடப்பாடி டீம் ‘மாஜி’க்கு வந்த சிக்கல்! போலீசுக்கு அதிரடி உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்!

Google Oneindia Tamil News

சென்னை : வருமானத்திற்கு அதிகமாக 11.32 கோடி சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன் உள்ளிட்டோர் பேர் மீது தொடர்ந்த வழக்கில் விரைவாக குற்ற பத்திரிகை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். தர்மபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார்.

இவர், உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த காலக்கட்டமான 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஓ பன்னீர் செல்வம் திமுகவின் பி டீமா?.. நிருபர்களின் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் இப்படி சொல்லிட்டாரே! ஓ பன்னீர் செல்வம் திமுகவின் பி டீமா?.. நிருபர்களின் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் இப்படி சொல்லிட்டாரே!

கே.பி அன்பழகன் வழக்கு

கே.பி அன்பழகன் வழக்கு

அதனடிப்படையில் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கே.பி அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில் கே.பி.அன்பழகன் தேர்தலின் போது கணக்கு காட்டபட்ட சொத்துக்களின் மதிப்பை வைத்து விசாரணை நடத்தினர்.

சொத்து குவிப்பு வழக்கு

சொத்து குவிப்பு வழக்கு

அப்போது அவர் பெயரிலும், அவரது உறவினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக, 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் தாரரான கிருஷ்ணமூர்த்தி மேலும் ஒரு வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

குற்ற பத்திரிகை தாக்கல்

குற்ற பத்திரிகை தாக்கல்

அதில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்ததும் இன்னும் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும் எனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

போலீசாருக்கு உத்தரவு

போலீசாருக்கு உத்தரவு

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எவ்வளவு விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

English summary
The Chennai High Court has directed the Anti-Corruption Police to file a criminal case against former minister KP Anpalagan and others for amassing assets worth over Rs 11.32 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X