இவங்களா "குழந்தை"? மேயர் பதவி அல்ல பொறுப்பு! செய்தியாளர் கேள்விக்கு "மேயர்" பிரியா சொன்ன பளீச் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மேயர் பிரியாவின் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அவருக்கு சரியாக பேச தெரியவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில்தான் தெளிவாக அவர் அளித்த பேட்டி ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

சென்னை மேயராக திமுக கவுன்சிலர் பிரியா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். சென்னையின் முதல் தலித் மேயர், இரண்டாவது பெண் மேயர் என்று பல அடையாளங்களோடு இவர் பதவி ஏற்று இருக்கிறார். வடசென்னையில் இருந்து முதல்முறையாக ஒருவர் மேயராக பொறுப்பேற்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருக்கு 28 வயதே ஆகும் நிலையில், இளமையான மேயர் சென்னைக்கு என்னவெல்லாம் செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் பதவி ஏற்றதும் இவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி சர்ச்சையானது.

சர்ச்சை

சர்ச்சை

செய்தியாளர் சந்திப்பில் இவரிடம் கேள்வி கேட்கப்பட்ட போது அதற்கு பின்னால் இருந்த அமைச்சர் சேகர் பாபு பதில் சொல்லிக்கொடுத்தார். முதல்வர் உங்களிடம் என்ன சொன்னார் என்று செய்தியாளர் கேட்டதற்கு.. பின்னால் இருந்த அமைச்சர் சேகர் பாபு நன்றாக பணி செய்ய சொன்னார் என்று கூறினார். இதை கேட்டு மேயர் பிரியாவும் நன்றாக பணி செய்ய சொன்னார் என்று ரிப்பீட் செய்தார். அதே போல பேட்டி முடிந்து செல்லும் போது சேகர் பாபு ஒரு குழந்தை கிட்ட போய் இப்படியா கேள்வி கேட்பீங்க என்று பதில் சொல்லிவிட்டு சென்றார்.

 விளையாட்டு

விளையாட்டு

அமைச்சர் சேகர் பாபு விளையாட்டாக சொன்னது இணையம் முழுக்க சர்ச்சையானது. பிரியா ஒரு குழந்தை என்றால் ஏன் அவரை மேயராக்க வேண்டும். அவருக்கு பெயருக்கு பதவியை கொடுத்துவிட்டு அதிகாரத்தை யார் கையில் வைத்து இருப்பார்கள்? என்று பிரியா பற்றி பலர் கேள்வி எழுப்பி இருந்தனர். பாஜகவினர் இவரை குழந்தை குழந்தை என்று கூறி விமர்சனம் செய்து வந்தனர். அதோடு கேரளாவில் திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனின் தீரமான பேச்சோடு இவரை ஒப்பிட்டும் விமர்சனம் செய்தனர்.

பதிலடி

பதிலடி

அவருக்கு சரியாக பேச தெரியவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில்தான் தெளிவாக அவர் அளித்த பேட்டி ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. குழந்தை என்று சொல்லப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் பிரியா பேசி இருக்கிறார். liberty tamil என்ற சேனலுக்கு அவர் அளித்துள்ள மேயர் பதவி குறித்த கேள்விகளுக்கு மிகவும் தெளிவாக பதில் அளித்து இருக்கிறார். மேயர் பதவியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு.. இது வெறும் பதவி அல்ல இது பொறுப்பு.. உள்ளாட்சி தேர்தல் ரொம்ப காலமாக நடக்கவில்லை.

 நிறைய பிரச்சனை

நிறைய பிரச்சனை

நிறைய பிரச்சனைகள் இதனால் இருந்தது. இனி வார்டு வாரியாக நிறைய திட்டங்கள் கொண்டு வரப்படும், கவுன்சிலர்களுக்கு இது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்படும். நிறைய திட்டங்கள் தயாராக இருக்கிறது. இது பெரிய பொறுப்பு. சந்தோசம் என்பதை விட பெரிய பொறுப்பு இது.. இதை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். பணிகளை நன்றாக செய்து திருப்தி கிடைத்தால் மட்டுமே நான் மகிழ்ச்சி அடைவேன்.

தலித் பெண்

தலித் பெண்

ஒரு தலித் பெண்ணாக எனக்கு இந்த பதவியை கொடுத்ததற்கு பலரும் சந்தோசம் அடைகிறார்கள். மக்களும், முதல்வரும் இதை சந்தோசமாக பார்க்கிறார்கள். முதல்வர் ஒரு மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறார். அவர் முன்னுதாரணமாக இருக்கிறார். நான் இதை பெரிய சாதனையாகத்தான் பார்ப்பேன். அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். சம உரிமை.. பெண் வேறு ஆண் வேறு என்று பார்க்காமல் அவர் உரிமை கொடுத்து உள்ளார்.

கற்க வேண்டும்

கற்க வேண்டும்

எல்லோரும் இதை கற்க வேண்டும். சென்னையை பொறுத்த வரை நான் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் அது வெள்ள நீர் வடிகால் வசதிதான். மழை காலத்தில் வெள்ளம் ஏற்படுகிறது. அதுதான் சென்னையின் பெரிய பிரச்சனை என்று கருதுகிறேன். அதை சரி செய்வோம்.8 மாதத்தில் முதல்வர் நிறைய நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இது தொடர்பான திட்டங்களை, அடுத்த மழைக்குள் நாங்கள் நிறைவேற்றுவோம் என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+