நாளை உருவாகும் புதிய காற்றழுத்தம்.. நவ.10 முதல் சென்னை உள்பட தமிழகத்தில் மிக கனமழை.. வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்பட 15 மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இதே பகுதிகளில் உருவாகி, 09 - 11 தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக, 08.11.2022 மற்றும் 09.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

10.11.2022:

10.11.2022:

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

 11.11.2022:

11.11.2022:

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, இராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

 12.11.2022:

12.11.2022:

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை:

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

சென்னை நுங்கம்பாக்கம் 6, திருக்குவளை (நாகப்பட்டினம்) 5, மகாபலிபுரம் ( செங்கல்பட்டு), திருப்போரூர் (செங்கல்பட்டு) தலா 4, அண்ணாமலை நகர் (கடலூர்), கடவனூர் (கள்ளக்குறிச்சி), சிதம்பரம் AWS (கடலூர்), சிவகிரி (தென்காசி), சிதம்பரம் (கடலூர்), தொண்டையார்பேட்டை (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு), பரங்கிப்பேட்டை (கடலூர்), மயிலாடி (கன்னியாகுமரி), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), கொள்ளிடம் (மயிலாடுதுறை), டிஜிபி அலுவலகம் (சென்னை), ராதாபுரம் (திருநெல்வேலி), சென்னை கலெக்டர் அலுவலகம் தலா 3, வீரகனூர் (சேலம்), நாகர்கோவில் (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி), செங்கோட்டை (தென்காசி), தக்கலை (கன்னியாகுமரி), சென்னை விமான நிலையம் (சென்னை), திருப்பதிசாரம் AWS ( கன்னியாகுமரி), எம்ஜிஆர் நகர் (சென்னை) , கோடியக்கரை (நாகப்பட்டினம்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), சுருளக்கோடு (கன்னியாகுமரி), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), தென்பரநாடு (திருச்சி), மீனம்பாக்கம் ISRO AWS (சென்னை), பள்ளிக்கரணை ARG (சென்னை) தலா 2, பெரம்பூர் (சென்னை), கொளச்சல். (கன்னியாகுமரி), பூதபாண்டி (கன்னியாகுமரி), காரைக்கால், புத்தன் அணை (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), கன்னியாகுமரி, வேதாரண்யம் (நாகப்பட்டினம்), தழுதலை (பெரம்பலூர்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), மணமேல்குடி (புதுக்கோட்டை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), கன்னிமார் (கன்னியாகுமரி), மதுக்கூர் (தஞ்சாவூர்), கீழ் கோதையர் ARG (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), திண்டுக்கல், துறையூர் (திருச்சி), மதுராந்தகம் (செங்கல்பட்டு), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) தலா 1.

 மீனவர்களுக்கான எச்சரிக்கை:

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

08.11.2022 மற்றும் 09.11.2022: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

 10.11.2022 முதல் 12.11.2022 வரை:

10.11.2022 முதல் 12.11.2022 வரை:

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+