Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மெட்ரோ ரயில் பூந்தமல்லி வழித்தடம்.. ஜரூராக ஆரம்பிக்க போகும் பணிகள்! வெளியான குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை (Chennai metro) பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அங்கு மெட்ரோ ரயில் சேவையையும் கொண்டு செல்லும் விதமாக சென்னை பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் முதல்கட்டமாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை ரயில் வழித்தடம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக சுங்குவார்சத்திரம் முதல் பரந்தூர் வரை ரயில் வழித்தடம் அமைக்கப்படும்.

chennai-metro-gets-green-signal-2-126-crore-sanctioned-for-poonamallee-sunguvarchatram-line

பரந்தூர் விமான நிலையம்

தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. தனிநபர் வாகனங்கள் அதிகரிப்பும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, தமிழக அரசும் போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையை அடுத்துள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகளை செய்து வருகிறது.

பூந்தமல்லி டூ சுங்குவார்சத்திரம்

அதே நேரம் மெட்ரோ ரயிலையும் பரந்தூர் வரை இயக்க முடிவு செய்தது. இதற்கான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சென்னையில் இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ. வரை மெட்ரோ ரயில் விரிவாக்கம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு நீண்ட காலமாக ஒப்புதல் கிடைக்காமல் இருந்த நிலையில், நேற்று அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கீடு

இந்த நிலையில், சென்னை பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்து, அதற்காக ரூ.2,126 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 4-வது வழித்தடமாக பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடத்தை பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை நீட்டிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. இதனை இரு கட்டங்களாக செயல்படுத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை முதல் கட்ட பணிகளை தொடங்க ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. பூந்தமல்லி பைபாஸ் முதல் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் சேவையை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

பரந்தூர் வரை நீட்டிக்கப்படும்

இதில், பூந்தமல்லி பைபாஸ், நகரப்பேட்டை, செம்பரம்பாக்கம், திருமழிசை, பாப்பன்சத்திரம், செட்டிமேடு, ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டு தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

இதனை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக சுங்குவார்சத்திரம் முதல் பரந்தூர் வரை இந்த வழித்தடம் நீட்டிக்கப்படும். இதன்படி, நிலம் கையகப்படுத்தல் பணி, சாலைப் பணி, நிலப்பரப்பு ஆய்வுகள், புவி தொழில்நுட்ப விசாரணை, குடிமைப் பணிகள் மற்றும் மரம் வெட்டுதல், மறு நடவு உள்பட பல்வேறு பணிகள் செய்யப்பட உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+