சென்னை மெட்ரோ டிக்கெட்.. இனி லைனில் காத்திருக்க வேண்டாம்.. வாட்ஸ் அப்பில் வருகிறது.. ஹேப்பியா
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் ரயில் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட நேரம் லைனில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் பயணிகள் சிரமத்தை குறைக்கும் வகையில் வாட்ஸ் அப் மூலமே டிக்கெட் எடுக்கும் சூப்பர் வசதியை விரைவில் அமல்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
அதிலும் பீக் நேரங்களில் சென்னை சாலையில் பயணிப்பது என்றாலே பலருக்கும் தலைவலியே வந்து விடும். அந்த அளவுக்கு வாகன நெரிசல் இருக்கும்.

பயணிகள் கூட்டம்
அதோடு குறிப்பிட்ட நேரத்திற்கு திட்டமிட்டு செல்ல முடியாது. இதனால், பலரும் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய இடத்திற்கும் சென்றுவிடலாமா என நேரத்தை பார்த்துக்கொண்டு பரபரப்பாக செல்வதையே காண முடியும். கடும் போக்குவரத்து நெரிசலில் இருந்து சென்னைவாசிகளை காப்பாற்றும் வகையில் மின்சார ரயில்கள் இயங்குகின்றன. அங்கும் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

மெட்ரோ ரயில்கள்
இதனால் பயணிகளின் வசதிக்காக சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு மெட்ரே ரயில் சேவை தொடங்கப்பட்டது. முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்த இரு வழித்தடங்களிலும் நாள்தோறும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்
இதனால், டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு கியூ ஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக பயணிகள் அடிக்கடி முன்வைக்கும் குற்றச்சட்டாக உள்ளது. இதனால், பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் விரைவில் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் வசதியை சென்னை மெட்ரோ விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:-

மிகவும் எளிதான நடைமுறை
பயணிகள் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம் ஆக உள்ளது. வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுப்பது மிகவும் எளிதான நடைமுறையே ஆகும். பயணிகள் முதலில் தங்கள் வாட்ஸ் அப்பில் இருந்து மெட்ரோ வெளியிட்டு இருக்கும் வாட்ஸ் அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். அதன்பிறகு எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆப்ஷன் வரும். பயணிகள் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை அதில் குறிப்பிட்டவுடன் கட்டணம் செலுத்துவதற்கான கேட்வேவிற்கு செல்லும்.

எப்படி டிக்கெட் எடுப்பது?
அதில் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் வேலட்கள், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமாக கட்டணத்தை செலுத்த வேண்டும். உடனடியாக டிக்கெட் வந்துவிடும். டிக்கெட்டை எந்த தாமதமும் இன்றி உடனடியாக வாட்ஸ் அப் மூலமாக பெற்றுக்கொள்ளாலாம். இந்த டிக்கெட்டை ரயிலில் ஏறுவதற்கு செல்வதற்கு முன்பாக இருக்கும் நுழைவுப் பகுதியில் காண்பித்துவிட்டு பயணிகள் செல்ல முடியும். டிக்கெட் எடுப்பதற்கான இந்த வாட்ஸ் அப் எண் விரைவில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும். வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி பெங்களூரு மற்றும் ஐதராபாத் மெட்ரோ ரயில் நிலையங்களில் கடந்த ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications