கிளம்பிய தீப்பொறி.. பூந்தமல்லி ரூட்டில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் 'திடீர்' நிறுத்தம்
சென்னை: சென்னையில் இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வரும் நிலையில் இன்று பூந்தமல்லி முதல் முல்லைத்தோட்டம் வரையிலான 2.5 கிமீ தூரத்துக்கு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட இருந்தது. இந்த சோதனை ஓட்டத்திற்கு முன்பாக திடீரென மின் வயரில் தீப்பொறி ஏற்பட்டதால் சோதனை ஓட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
சென்னை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் சேவையை பொருத்தவரை சென்னையில், முதல் கட்ட மெட்ரோ திட்டத்தில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை முதல் சென்னை செண்ட்ரல் வரையிலும் என இரண்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் சுமார் 3.1 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்கிறார்கள். தற்போது சென்னையில் இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டு அதன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 118.9 கி.மீ நீளத்தில் 128 ரயில் நிலையங்களுடன் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் இந்த பணிகள் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 80 சதவிகிதம் முடிந்துள்ளது.
இதில் பூந்தமல்லி பைபாஸ் முதல் கலங்கரை விளக்கம் இடையேயான வழித்தடத்தில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இதில், பூந்தமல்லி முதல் முல்லைத்தோட்டம் வரையிலான 2.5 கிமீ தூரத்திற்கான தண்டவாளம் அமைக்கும் பணிகள் முழுவதுமாக முடிந்துள்ளது. இதன்பின்னர் இன்று இங்கு சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்பேரில் 3 பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்துக்கு தயாராக வந்தது.
முன்னதாக இன்று 5 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்குவதாக கூறப்பட்டது. மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்குவதற்கு முன்பாக அந்த வழித்தடத்தில் தண்டவாளத்தில் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனை செய்யும் வாகனத்தில் தண்டவாளத்தில் மின் இணைப்பு, சென்சார்கள் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டது. எனினும் மாலை 6 ஆகிய பின்னரும் அங்கு சோதனை ஓட்டம் நடத்தப்படவில்லை.
இதையடுத்து தான் சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஓட்டுநரே இல்லாமல் சென்சார் மூலமாக செல்லும் நடத்தப்பட இருந்த முதல் கட்ட சோதனைக்கு முன்பே தண்டவாள மின் வயரில் திடீரென்று தீப்பொறி கிளம்பியுள்ளது என்றும், இதன் காரணமாகவே இந்த சோதனை ஓட்ட பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மின் வயரில் எப்படி தீப்பொறி ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ரயில்வே தரப்பில் கூறுகையில், "சென்னை பூந்தமல்லியில் இருந்து முல்லைத்தோட்டம் வரையிலான 2 கிமீ தூரத்துக்கு இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட இருந்தது. இந்த சோதனை ஓட்டத்திற்கு முன்னதாக மின்வயரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு தீப்பொறி கிளம்பியிருக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக சோதனை ஓட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் சோதனை ஓட்டம் நடத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
-
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications