இருக்கு.. கச்சேரி இருக்கு.. சாட்டை எடுக்கும் முதல்வர்.. அட்ராசிட்டி கணவர்கள்.. மேயர் பிரியா வார்னிங்
திமுக பெண் கவுன்சிலர்களை சென்னை மேயர் பிரியா எச்சரித்துள்ளார்
சென்னை: பெண் கவுன்சிலர்களை தவறாக யாராக பயன்படுத்தினாலோ அல்லது அவர்களின் கணவர்கள் அவர்களை தவறாக வழிநடத்தினாலோ அவர்கள் மீது தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று சென்னை மேயர் பிரியா வார்னிங் தந்துள்ளார்.
திமுகவும் சரி, அதிமுகவும் சரி, எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் உள்ளாட்சியில் பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகள் அவர்களது கணவரோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இருப்பதாக நீண்டகாலமாக இருந்து வருகிறது.
10 வருடம் ஆட்சி இல்லாமல் திமுக அரியணை ஏறியுள்ளதால், இது சற்று அதிகமாக காணப்படுகிறது. அதையொட்டிய சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன.

கனிமொழி
இதுபோல் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், முதல்வர் ஸ்டாலினும், எம்பி கனிமொழியும் புதிதாக பதவியேற்ற பெண் கவுன்சிலர்கள், மேயர்களுக்கு ஏராளமான அறிவுரைகளை வழங்கியிருந்தனர்.. இன்னும் மாமன்ற கூட்டமே ஆரம்பிக்காத நிலையில், பெண் கவுன்சிலர்கள் தொடர்பான சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்துவிட்டன.. வழக்கம்போல் எதிர்க்கட்சிகளும் இதை விமர்சிக்க ஆரம்பித்து விட்டன.. சமீபத்தில் போலீஸ்காரரை தரக்குறைவாக பேசி இழிவுபடுத்திய கவுன்சிலரின் கணவர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கனிமொழி
என்றாலும், அவர்களை கைது செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்து வருகிறது.. அநேகமாக முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் இருந்து திரும்பியவுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீதான நடவடிக்கைகள் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.. இந்நிலையில்தான், சென்னை மேயர் பிரியாவும், பெண் கவுன்சிலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேயர் பிரியா
ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகத்தை மேயர் பிரியா திறந்துவைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த மேயர் பிரியா, பாலின நிகர் மேம்பாடு மையம் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தடுப்பதற்காகவும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்றார்.

கணவன்கள்
பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் மீதான புகார்கள் குறித்து செய்தியாளர்கள் பிரியாவிடம் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பிரியா, "யாருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதோ அவர்கள்தான் அந்த பணியை செய்ய வேண்டும். யார் கவுன்சிலரோ அவர்கள் அவர்கள் பணியை செய்ய வேண்டும்.. அதை மீறி யாரேனும் தவறாக அவர்களை பயன்படுத்தினாலோ அல்லது அவர்களின் கணவர்கள் அவர்களை தவறாக வழிநடத்தினாலோ அவர்கள் மீது தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்கும்...

ஸ்டாலின் கண்டிப்பு
கவுன்சிலர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பணி என்ன என்பது தெரியும். ஏதேனும் அவர்களுக்கு தெரியாத பட்சத்தில் தேவையான அறிவுரைகள் வழங்கப்படும் என்றார்.. ஏற்கனவே டெல்லியில் இருந்து திரும்பியதும், முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற தகவல்கள் வட்டமடித்து வரும் நிலையில், மேயர் பிரியாவும் அதையே எச்சரித்துள்ளது பெண் கவுன்சிலர்களிடையே கிலியை தந்து வருகிறது. கவுன்சிலர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பணி என்ன என்பது தெரியும். ஏதேனும் அவர்களுக்கு தெரியாத பட்சத்தில் தேவையான அறிவுரைகள் வழங்கப்படும் என்றார்.. ஏற்கனவே டெல்லியில் இருந்து திரும்பியதும், முதல்வர் வடவடிக்கை எடுப்பார் என்ற தகவல்கள் வட்டமடித்து வரும் நிலையில், மேயர் பிரியாவும் அதையே எச்சரித்துள்ளது பெண் கவுன்சிலர்களிடையே கிலியை தநது வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications